செவ்வாய், 25 டிசம்பர், 2018

கிறிஸ்மஸ்

லூக்கா 2 : 11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! கிருபை யாவரோடும் இருப்பதாக! உங்கள் யாவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல்வாழ்த்துக்கள்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பிறந்தார். அவர் ஒரு சாதாரண மனிதனாய் அதே சமயத்தில் தேவவல்லமை உள்ளவராக இந்த உலகில் உங்களுக்காகவும் சகல மனிதர்களுக்காகவும் இரட்சகராய் பிறந்தார்.  இரட்சகர் என்றால் எல்லா பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் பிசாசின் பிடிகளில் இருந்தும் நம்மை விடுவிக்கும்படி பிறந்தார்.  இயேசு பிறந்த போது அந்த செய்தி ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு முதலாவது தேவதூதர்கள் மூலமாய் அறிவிக்கப்பட்டது. ஒரு பொருட்டாய் எண்ணப்படாதவர்களை பரலோகம் எண்ணிப்பார்த்தது என்ன ஒரு வியப்பு! இந்த உலகில் உள்ள எந்த ஒரு மனிதனும் புறக்கணிக்கப்பட கூடாது என்பதை தேவன் இதன் மூலம் நாம் அறியும்படி செய்கிறார்.  ஆகவே சிறுமையானவர்களை நாம் எப்போதும் நினைக்கவேண்டும்/சேர்த்துக்கொள்ள வேண்டும்  என்று தேவன் விரும்புகிறதை இவ்வசனத்தின்படி அறிகிறோம். ஏசாயா 58 :7 துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், இயேசு பிறந்த பொழுது மேய்ப்பர்கள் இயேசு இருந்த இடத்தில் அதாவது சத்திரத்தின் முன்னணையிலே  வந்து அவரை தரிசித்தார்கள். இந்த பகுதிலிருந்து இயேசு பிறக்கும்போதே சிறுமையானவர்களை அவர் சேர்த்துக்கொள்ளுகிறதை பார்க்கிறோம்! அப்படிபோல ஞானிகளையும் அவர் சேர்த்துகொள்கிறதை மத்தேயு 2: 10,11ல் வாசிக்கிறோம்! எளியவன் என்றும் இல்லை, உயர்ந்தவன் என்றும் இல்லை ஆண்டவரை பார்க்கவேண்டும் என்று ஆவல் கொள்ளுகிற யாவரும் அவரை காண்பார்கள் அவரும் அவர்களை சேர்த்துக்கொள்ளுவார். ஆமென்! வித்தியாசமே இல்லை. 

இயேசு பிறந்த பொழுது லூக்கா 2 :14. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். இப்படியாக  தூதர்கள் தூதிக்கிறதை பார்க்கிறோம்! இயேசு பிறக்கும் போதே பிதாவை மகிமை படுத்துகிறவராய் அதேபோல் பூமியில் சமாதானம் அருளும்படி பிறந்தார். மாத்திரம் அல்ல இயேசுவின் பிறப்பு மனுஷர் மேலும் பிரியம் உண்டாக காரணம் ஆயிற்று! தேவனுக்கே மகிமை! 

கிறிஸ்து பிறப்பை அனுசரிக்கும் அல்லது கொண்டாடும் நீங்கள் கர்த்தராகிய இயேசு செய்தது போல் யாவரையும் சமநோக்கு பார்வையோடு அணுகுகிறீர்களா? தேவனை மகிமைப்படுத்துகிறீர்களா? சமாதானம் பண்ணுகிறவர்களாய் இருக்கிறீர்களா?  மற்றவர்கள் மேல் அன்பு செலுத்துகிறவர்களை இருக்கிறீர்களா? சற்று ஆராய்ந்து பார்ப்போம்! அப்படி இல்லையென்றால் இந்த  கிறிஸ்மஸ் நாட்களில் ஒரு தீர்மானத்தோடு கடந்து போவோம் தேவகிருபை யாவரோடும் இருப்பதாக ஆமென்! 


அனுப்பப்பட்டவன் 
சகோ  புரூஸ் 
கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள் 
ஜெப உதவிக்கு  +91 970 36 76 184

கருத்துகள் இல்லை: