வெள்ளி, 21 டிசம்பர், 2018

ஞானஸ்நானம்

*ஞானஸ்நானம்*


*1. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெறுதல்* 


மாற்கு 16: 16. *"விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்."*

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! கிருபை யாவரோடும் இருப்பதாக! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை / கிறிஸ்துவின் சுவிசேஷத்தை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று சத்திய வேதம் சொல்லுகிறதுஅவரை விசுவாசியாமல் ஞானஸ்நானம் பெறுதல் எவ்விதத்திலும் பிரயோஜனம் இல்லை. சில சபைகளில் குழந்தை ஞானஸ்நானம் முறை இருக்கிறதுஅது வேதத்தில் இல்லாத ஒன்று. குழந்தை ஞானஸ்நானம் அல்லது பிரதிஷ்டை செய்து பக்தி மார்க்கத்தில் வார்ப்பது நல்லது தான்ஆனாலும் அக்குழந்தை வளர்ந்தபின் கர்த்தரை ஏற்றுக்கொண்டு தன்  பாவத்தை அறிக்கையிட்டு  ஞானஸ்நானம் பெற்றால் தான் பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியும் என்பதை நிச்சயமாய் அறியுங்கள்.  கர்த்தரை பற்றுகிற  விசுவாசம் இல்லாமல் கட்டாயத்தினால்   ஞானஸ்நானம் பெறுகிற அல்லது பெற்றவர்கள் நிச்சயமாய் பரலோக இராஜ்ஜியம் செல்ல முடியாது. கர்த்தரை வாயினால் அறிக்கையிட்டு இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே!  ஆகவே முழுமையாய் அவரை இருதயத்தில் விசுவாசித்து  ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வோம் அப்பொழுது மீட்கப்படுவோம்.       

*2. மனம் திரும்பி ஞானஸ்நானம் பெறுதல்* 


*அப்போஸ்தலர் 2 : 38* பேதுரு அவர்களை நோக்கி: *நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று* இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.


மனம் திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டும்! அது என்ன மனம் திரும்புதல்?  பழைய வாழ்வை விட்டுஅதாவது பாவ வாழ்வைவிட்டு மனம் திரும்பி ஞானஸ்நானம்  பெற வேண்டும்.  எது பாவம் *யோவான் 5 : 17. அநீதியெல்லாம் பாவந்தான்;*  கர்த்தருடைய வேதத்தில் சொல்லுகிற ஒவ்வொரு காரியத்தையும் கவனித்து நடந்துசத்திய வேதம் காண்பிக்கிற பாவங்களை விட்டு அதாவது பின்வரும் வசனத்தின்படி *கலாத்தியர் 5 : 19 – 21* மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றனஅவையாவன:  விபசாரம்வேசித்தனம்அசுத்தம்காமவிகாரம்விக்கிரகாராதனைபில்லிசூனியம்பகைகள்விரோதங்கள்வைராக்கியங்கள்கோபங்கள்சண்டைகள்பிரிவினைகள்மார்க்கபேதங்கள்,  பொறாமைகள்கொலைகள்வெறிகள்களியாட்டுகள் முதலானவைகளே


நீங்கள் ஒருவேளை நினைக்கலாம் நான் வேசித்தனம் பண்ணவில்லையே என்றுகர்த்தராகிய இயேசு கிறிஸ்து சபைக்கு தலையாய் மாத்திரம் அல்ல பின்வரும் வசனத்தின் படி *எபேசியர் 5 :29 – 33*  தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; *கர்த்தர்* சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறது போல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான். நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும்அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுதன் மனைவியுடன் இசைந்துஇருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.  *இந்த இரகசியம் பெரியதுநான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.* எப்படியும்உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோலதன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள். *இவ்வசனங்களின்படி கிறிஸ்து சபையின் புருஷனாய் இருக்கிறார்.* ஆகவே ஒரு மனைவியானவள் தன் புருஷனுடைய விருப்பத்தை நிறைவேற்ற எப்படி முற்படுவாளோ அப்படிபோலவே  சபையும் அதாவது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் அங்கம் வகிக்கும் நீங்களும் அவருக்கு மனைவியாய் இருக்கிறீர்கள் என்று எப்போதும் நினைத்து அவரின் விருப்பபடி கட்டளையின்படி நடக்க வேண்டும்.  

*எரேமியா 3 : 9* பிரசித்தமான அவளுடைய *வேசித்தனத்தினாலே* தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; *கல்லோடும் மரத்தோடும் விபசாரம்* பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார். இவ்வசனத்தின் படி ஆண்டவரை விட்டு விக்கிரகத்தை வணங்கினதால் ஆண்டவர் ஜனங்களை பார்த்து விபசாரமும் வேசித்தனமும் பண்ணீர்கள் என்று சொல்லுகிறார்அதாவது கர்த்தரை விட்டு எதோ ஒரு காரியத்தை முக்கியப்படுத்துவோமென்றால் அது விக்கிரக ஆராதனையாய் மாறுகிறது. ஆகவே கிறிஸ்துவின் மனைவியாகிய நாம் பயபக்தியாய் அவரையே மாத்திரம் சார்ந்து நடப்போம்வேசித்தனமில்லாத வாழ்வை கர்த்தருக்காய் வாழ்வோம்! மனம் திரும்புங்கள்!  


இன்றைக்கு ஆபாச படங்கள் அல்லது ஆபாச திரைப்படங்கள் இணையதளம் மற்றும் கைபேசி மூலம் பரவி அசுத்தத்தையும் காமவிகாரத்தையும் உண்டுபண்ணி நம் பரிசுத்த வாழ்வை கெடுக்கிறது. இப்படிப்பட்டவைகளை விட்டு விலகி மனம் திரும்ப வேண்டும்! 

*எபேசியர் 5 : 5* விபசாரக்காரனாவதுஅசுத்தனாவது, *விக்கிரகாராத னைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது* தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. *பொருளாசையை  விக்கிரக ஆராதனை* என்று வேதம் குறிப்பிடுகிறதுநாம் பொருளாசைகளை விட்டு மனம் திரும்பவேண்டும். 

பில்லிசூனிய பாவத்தில் இருந்தால் அப்படிபட்டவைகளை விட்டு விலக வேண்டும்.  அப்படிபோல் *I சாமுவேல்15 : 23. இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியபாவத்திற்கும்,* முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறதுவெளித்தோற்றத்திற்கு கர்த்தருக்கு கீழ்படிவதை காண்பித்து அல்லது முழுமையான கீழ்ப்படிதல் இல்லாமல் பகுதியாய் கீழ்ப்படிவதை வேதம் இரண்டகம்பண்ணுதல்  என்று சொல்லுகிறது. இப்படிப்பட்ட கிரியைகளை விட்டு விலகவேண்டும். 

இப்படியாக மாம்சத்தின் கிரியைகளில் இருந்து முற்றிலும் விலகி மனம் திரும்ப வேண்டும். மாத்திரமல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை விசுவாசித்து அவரிடத்தில் சேரவேண்டும்.  இதுவே மனம் திரும்புதலாம் ஆமென்! தேவனிடத்தில் திரும்பி அவரையே சார்ந்து வாழ முற்படுவோம். நாம் முதலாவது இடம் கொடுக்கும்போது தேவன் தம் கிருபையை நமக்கு தந்து நம்மை நடத்துவார். 

*3. மூழ்கி  ஞானஸ்நானம் பெறுதல்*


ஞானஸ்நானம் என்றால்  ஞானம் மற்றும் ஸ்நானம் அதாவது தேவனை பற்றிய அறிவு ஞானமாம்ஜலத்தினால் முழுவதும் கழுவப்படுதல் ஸ்நானம்  
*யோவான் 3 : 23* சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே *தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால்,* யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். தெளிப்பு ஞானஸ்நானத்திற்கு ஒரு சிறு குவளை தண்ணீர் போதுமே ஆனால் இவ்வசனத்தின்படி தண்ணீர் மிகுதியாய் இருந்த இடத்திலே அதாவது ஒரு மனிதன் மூழ்கி ஞானஸ்நானம்  பெறவேண்டும் என்கிற அடிப்படையில் தான் தண்ணீர் மிகுதியாய் உள்ள இடத்தை தெரிந்து கொண்டு ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்பதை பார்க்கிறோம். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். 
*மத்தேயு 3: 15*  "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: *இப்பொழுது இடங்கொடுஇப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.*  அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்." 
கர்த்தராகிய இயேசு ஒரு பாவமும் அறியாதவர்தன்னுடைய பன்னிரண்டு வயதில் பார்க்கும்போது பிதாவுக்கடுத்தவைகள் என்று சொல்லி தன்னை தேவநீதியில் நடத்த பழக்கியவர்தேவ ஞானத்தோடு செயல்பட்டவர்ஒரு குறைவில்லாதவர்அப்படிப்பட்டவரே எல்லா தேவ நீதியையும் நிறைவற்ற வேண்டும் என்று சொல்லி ஞானஸ்நானம் பெறுவாரென்றால் நாம் அவரை பின்பற்றுகிறவர்களாக அவரைப்போலவே மூழ்கி ஞானஸ்நானம் பெற வேண்டியது அதிக நிச்சயமல்லவா


*4. திரித்துவ நாமத்தில் ஞானஸ்நானம்* 


கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த பரம கட்டளையில் நாம் பார்க்கும்போது  *மத்தேயு 28 : 19* ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, *பிதா குமாரன் பரிசுத்த ஆவி*யின்  நாமத்திலே  அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,  இவ்வார்த்தையின்படி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால்  ஞானஸ்நானம் பெறுதல் வேண்டும். சிலர் இல்லை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம்  பெற்றால் போதும் என்று *அப்போஸ்தலர் 2: 38* மேற்கோள் காட்டுகின்றனர், இதில்  ஒரு காரியத்தை கவனித்தோமென்றால், கர்த்தராகிய இயேசுவை கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ளாத யூதர்களிடத்தில் அப்போஸ்தலனாகிய பேதுரு முழு நிச்சயத்தோடு இயேசு தேவகுமாரன் என்று திருஷ்டாந்தம் பண்ணுகிறதினால் தான் அப்படி சொல்லுகிறார் என்பதை அறிய வேண்டும்.  கிருபை யாவரோடும் இருப்பதாக ஆமென்! 


இப்பொழுதே உங்களை ஞானஸ்நானத்திற்கு ஒப்புக்கொடுப்பீர்களா! தேவ நீதியை நிறைவேற்றுவீர்களாஇன்றே இரட்சண்ய நாள் இன்றே மனம் திரும்புங்கள் பரலோக வாசலுக்கு நேரே கடந்து போவோம் வாருங்கள். தேவ  சமாதானமும் கிருபையும் உங்களை ஆளுகை செய்வதாக ஆமென்! 

அனுப்பப்பட்டவன் சகோ புருஸ்
கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள்
ஜெபஉதவிக்கு +91 970 36 76 184 


கருத்துகள் இல்லை: