வியாழன், 23 நவம்பர், 2017

கர்த்தரை பரிசுத்தம்பண்ணுங்கள் - Sanctify the Lord

கர்த்தரை பரிசுத்தம்பண்ணுங்கள்


I பேதுரு 3:15ல் எழுதியிருக்கிறபடி கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள் என்றால் என்ன, சற்று ஆராய்ந்து அறிந்து கொள்வோமா? தேவன் சொல்லுகிறதை அவர் சொல்லுகிற பிரகாரம் செய்கிறதே கர்த்தரை பரிசுத்தம் பண்ணுகிறதாம்.

எண்ணாகமம் 20: 12, “இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால்” இந்த பகுதியில் நாம் கவனித்தால் மோசேக்கு தேவன் கன்மலையோடு பேசும்படி கட்டளையிட்டதை செய்யாமல் தவறுதலாக கன்மலையை அடித்ததை பார்க்கிறோம். அப்படி செய்ததினால் தேவநீதி வெளிப்பட்டு கானானுக்குள் பிரவேசிக்கவில்லை.

லேவியராகமம் 10:3ல் என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம்பண்ணப்பட்டு , இந்த இடத்திலும் தேவன் கட்டளையிடாத அக்கினியை தேவ சமூகத்துக்கு கொண்டுவந்த ஆரோனின் புத்திரர் கர்த்தரால் அடிக்கப்பட்டதை பார்க்கிறோம்.

கர்த்தராகிய இயேசுவோ! ஒரு பாவமும் இல்லாதவர், தாயின் கருவில் பரிசுத்த ஆவியினால் உருவாக்கப்பட்டு பிறத்தவர், என்னில் பாவம் உண்டென்று யார் சொல்லக்கூடும் என்று சொன்னவர், காட்டிக்கொடுத்தவனாலும் குற்றமில்லாத இரத்தம் என்று சாட்சி பெற்றவர், இராஜாக்களால் ஒரு குற்றம் கூட கண்டுபிடிக்கபடாதவர் சொல்லுகிறார், யோவான் 17:19 அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.

இயேசு தான் போதித்தவைகளை, அவர் முதலாவது கைகொண்டார். பிதாவின் சித்தம் என்று சொல்லி மரணபரியந்தம் தன்னை ஒப்புகொடுத்தார். ஒரு பாவமும் இல்லாத அவரே வார்த்தையினால் கீழ்ப்படிதலை நமக்கு காட்டி தன்னை பரிசுத்தமாக்குவேன் என்று நமக்கு மாதிரியை வைத்துபோயிருக்கிறார்.

தேவன் ஒரு மனிதனுக்கோ அல்லது சபைக்கோ அல்லது ஒரு கூட்ட மக்களுக்கோ ஒரு காரியத்தை செய் என்று சொல்லும்போது அதை அப்படியே உள் வாங்கி அவர் சொல்லுகிறபடியே செயல்படுத்த வேண்டும். அப்படி செய்கிறதே கர்த்தராகிய தேவனை பரிசுத்தம் பண்ணுதல். ஆமென்! ஆமென்! ஆமென்!

கிருபை யாவரோடும் இருப்பதாக ஆமென்!
கிறிஸ்துவினால் அனுப்பப்பட்டவன்
சகோ புரூஸ்

Read in English

புதன், 22 நவம்பர், 2017

ஜீவனுக்கு உட்பட்டவர்கள் / Subject to Eternal Life

ஜீவனுக்கு உட்பட்டவர்கள்




யார் ஜீவனுக்கு உட்பட்டவர்கள் I யோவான் 3: 14 எழுதியிருக்கிற படி மரணத்தை விட்டு ஜீவனுக்கு உட்படுகிறவர்கள் சகோதரர்களிடத்தில் அன்பு கூருகிறவர்களே!

பழைய ஏற்ப்பாட்டின் படி குற்றமில்லாத இரத்தத்தை சிந்துவதை (எரேமியா 22:17) கொலையாக வேதம் காட்டினதுமல்லாமல் தேவனால் கடிந்துகொள்ளப் பட்டார்கள்.

ஆனால் புதியகற்பனைக்கு உறியவர்களாகிய நமக்கோ சரீர கொலை மாத்திரம் அல்ல சகோதரனிடத்தில் அன்பு கூராதிருந்தால் அதை மனுஷ கொலை பாதகன் என்று வேதம் அறிவிக்கிறது. அதை அறிந்து உணர்ந்து தேவனுக்கு பிரியமானபடி நடப்பது உத்தமம்.

கிறிஸ்துவை அறிந்தேன், இரட்சிப்பை பெற்றுக்கொண்டேன், ஒழுங்காக சபைக்கு வருகிறேன்! காணிக்கை, தசமபாகம் கொடுக்கிறேன்! சபையை சார்ந்த எல்லா ஊழியங்களிலும் பங்கு கொள்கிறேன்! அல்லது தேவனுக்கு ஊழியம் செய்கிறேன்! என்று சொல்லியும், ஆனால் சபைக்கு வருகிற மற்றொரு சகோதர/சகோதரியுடன் கசப்பு/பகை இருந்தாலோ அல்லது சொந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மீது ஏதோ ஒரு காரணதிற்காக பகை இருந்தாலோ அல்லது வேறு எதோ ஒரு காண்கிற சகோதரனை சகோதரியை பகைத்தால், ஜாக்கிரதை சகோதரேனே! சகோதரியே!

நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுப்பேன் என்று வாக்குபண்ணின நித்திய ஜீவனை இழந்துபோனீர்கள் என்று இப்பொழுதே அறிந்து மனம்திரும்புங்கள், உடனே சம்பந்த பட்டவர்களிடம் போய் ஒப்புரவாகுங்கள். அப்பொழுது மரணத்திற்கு நீங்கலாகி ஜீவனுக்கு உட்பட்டு இருப்பீர்கள். ஆவியானவர் சொல்லுகிறதை காது உள்ளவன் கேட்டக்ககடவன். பழைய கற்பனையைவிட புதிய கற்பனை மிகுந்த கருகலானதும் வாழ்வுக்கு போகிற வாசல் குறுகலானது என்பதை அறிந்து தேவன் எதிபார்க்கிற நீதியை இப்பொழுதே செய்திட ஆயத்தமாவோம்! ஜீவனுக்குள் உட்பட ஒருவரிலொருவர் அன்புகூருவோம்! அப்பொழுது ஒளியில் நிலைத்திருப்போம்! ஆமென்! ஆமென்! ஆமென்!

கிருபை யாவரோடும் இருப்பதாக ஆமென்!

கிறிஸ்துவினால் அனுப்பப்பட்டவன்

சகோ புரூஸ்

Read in English

செவ்வாய், 21 நவம்பர், 2017

கடுகுவிதையளவு விசுவாசம் - Mustard Seed Faith

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கடுகுவிதையளவு விசுவாசம் இருந்தால் உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று சொல்லுகிறாரே! (மத்தேயு 17:20) அது என்ன கடுகுவிதையளவு விசுவாசம்? கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது! என்று ஒரு வழக்க சொல் உண்டு. அதாவது கடுகு சிறியதாயிருந்தாலும் அதன் தன்மை மாறுகிறதே இல்லை என்று பொருள்! 

கடுகு முழுமையாய் விளைந்த பின்புதான் அதை எடுத்து வருகிறார்கள், அதன் பின்பே அதை பயன்படுத்த முடியும்! ஆகவே உங்கள் விசுவாசம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் முழுமை பெற்றிருந்தால் போதுமானது. உதாரணமாக ஒரு குஷ்டரோகி ஆண்டவரிடத்தில் வந்து உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான், சுத்தமானான்! 

ஒரு சகோதரி இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட்டால் சுகமாவேன் என்று முழுமையாய் நம்பி வந்து தொட்டாள் விடுதலையோடு சென்றாள்! நுற்றுக்கு அதிபதி ஒருவன் இயேசுவினிடத்தில் வந்து ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் என் வேலைக்காரன் பிழைப்பான் என்றான் சுகத்தை பெற்றுக்கொண்டான். மற்றொருவன் நீர்(இயேசு) வந்து கைகளை வையும் அப்பொழுது பிழைப்பாள் என்றான், அதுவும் நிறைவேறியது. 

இந்த சில உவமைகளில் நாம் பார்க்கிறதுபோல் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான விசுவாசம் உடையவர்களாய் இருந்தார்கள். ஆகவே தேவன்! எப்படிப்பட்டவிதமான விசுவாசமாயிருந்தாலும் தம் மீது முழுமையாய் விசுவாசிக்கிறவர்களுக்கு அதை வாயக்கப்பண்ணுகிறார். 

ஆக கடுகுவிதையளவு என்பது நீங்கள் விசுவாசிக்கிறதில் முழுமையாய் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். 

சத்துருவை துரத்தவும், பாவங்களை ஜெயிக்கவும், ஆசீர்வாத தடைகள் நீங்கி தேவ ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவும், பிறரை ஆசீர்வதிக்கவும் முழுமையாய் தேவனை விசுவாசிப்போம்! அவரிடத்திலிருந்து பெற்றுக்கொள்வோம்! கிருபை யாவரோடும் இருப்பதாக! 

கிறிஸ்துவினால் அனுப்பப்பட்டவன்
சகோ புருஸ் ராப்சன்
+91 970 36 76 184


Read in English

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

தேவன் சபைக்கு சொல்லுகிறதை காது உள்ளவன் கேட்கக்கடவன்




உபத்திரவத்தின் பாதை – முடிவில் தேவ எழுப்புதல்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! தேவ சமாதானமும் கிருபையும் பெருகுவதாக! தேவன் தம் ஊழியக்காரர்கள் மூலமாக வெளிப்படுத்தியிருந்த தீர்க்க தரிசனத்தின் விவரமாவது 2006ம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுகள், முதல் ஏழு ஆண்டுகள் ஆவிக்குரிய செழுமையின் ஆண்டு பின்ஏழு ஆண்டு ஆவிக்குரிய பஞ்சத்தின் ஆண்டு - ஊழியத்தில் மந்த நிலை காணப்படும், ஆத்தும அறுவடை பணியில் தொய்வு ஏற்படும், அதிகமான உபத்திரவம் இருக்கும், உபத்திரவத்தின் முடிவில் மிகப்பெரிய எழுப்புதல் நம் தேசத்தில் தேவன் கட்டளையிடுவார், அதன் பின் இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடாக உலக தேசங்களால் அறியப்படும்! 

இந்த தரிசனத்தின் காரியத்தின் அடிப்படையில் தேவசமூகத்தை நோக்கிப்பார்த்தபோது தேவன் தமது சபையும் தேவமனிதர்களும் என்ன செய்ய வேண்டும் என்று எஸ்தர் புஸ்தகத்தின் அடிப்படையில் காட்டி தந்தார். இந்த காரியத்தை அறிந்து சீக்கிரமாய்/தீவிரமாய் தேவபிள்ளைகளாய் தேவ சமூகத்தை நோக்கிப்பார்ப்போம்! தேவன் உபத்திரவத்தின் நடுவில் இருக்கும் தம் ஜனங்களின் இரத்தப்பலிகளை விசாரிப்பார் ஆமென்!

ஆகாஸ்வேரு ராஜா – கர்த்தருக்கு ஒப்பாக இருக்கிறார்!
எஸ்தர் – தேவ சபைக்கு ஒப்பாக இருக்கிறாள்!
ஆமான் – தேவஜனத்திற்கு எதிராய் இருக்கிற அரசு!
மொர்தெகாய் – தேவ ஊழியர்களை குறிக்கிறது!

ஆகாஸ்வேரு ஆமானை உயர்த்தினது போல தேவன் தற்போதைய அரசையும் உயர்த்தியிருக்கிறார்!
ஆகாஸ்வேரு எஸ்தரை தெரிந்துகொண்டது போல கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம் ஜனங்களை சபையாக தெரிந்துகொண்டிருக்கிறார்.
ஆமான் எப்படி வைராக்கியமாய் யூதர்களை முழுமையாய் அழிக்க வகை தேடினானோ அப்படி போலவே 2021ம் ஆண்டை தாய் மதம் திரும்புதலின் கடைசி நாட்களாக இந்த இராஜாக்கள் அறிவித்திருக்கிறதை நாம் அறிந்திருக்கிறோம்! அதன் எதிரொலியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்கங்கே அநேக ஊழியர்கள் துன்பப்படுத்தப்படுகிறத்தை காண்கிறோம்! அடிக்கப்பட்டார்கள், கொலைசெய்யப்பட்டார்கள், விரோதிக்கப்பட்டார்கள், சபை கூடிவருகிறதர்க்கு தடை செய்யப்பட்டார்கள்! இந்த உபத்திரவம் அதிகமாய் அடுத்த மூன்றரை ஆண்டுகளுக்கு தீவிரப்படும்! அநேகர் ஜீவனை தேவனுக்காய் இழந்து போவார்கள்!

*சபையே! இன்று உன்னிடத்தில் உபத்திரவங்கள் இல்லை என்று காணாததை போல் இராதே!* எஸ்தரை போல் உபவாசத்தொடும் கண்ணீரோடும் விழித்தெழு! தேவசமூகத்தை பார்த்து கதறி அழு! தேவன் மனமிரங்குவார்! அடிக்கப்படுகிற தேவபிள்ளைகளுக்காய் கதறு! மன்றாடு!

மொர்தெகாயாகிய தேவ ஊழியர்களே! தேவன் இந்த தீவிரமான சத்துருவுக்கு விலக்கிக்காக்கும்படி இணைத்து கதறி அழுங்கள்! உங்கள் வீணான கர்வம், அகங்காரம் விட்டு மற்ற ஊழியர்களோடு இணைத்து தேவசமூகத்தை தேடுங்கள்! எஸ்தராகிய சபை கைவிடப்படாதபடி நதியவள்ளவாய் கண்ணீரோடு தேவ சமூகத்தில் அழுது புலம்புவோம்!

ஆமான் தள்ளப்பட்டு மொர்தெகாய் நினைக்கப்பட்டதுபோல தேவன் நம்மை நினைத்தருளுவார் ஆமென்!

ஜெபிக்க வேண்டிய விதமாவது
1. சுத்திகரிக்கப்பட்ட ஜெபம் - பாவ அறிக்கை
2. தேவவசனத்தின்படி நடந்து நம்மை காத்துகொண்டு ஜெபம்
3. ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் கழுவப்பட்ட அனுபவம்
ஊழியர்காளாய் இணைத்து அவரவர் பகுதியில், உங்கள் சபையில், உங்கள் ஊழியத்தில் இந்த காரியத்தை நினைத்து செயல்படுவோம்! ஜெயம்பெறுவோம்!
2021 தாய்மதம் திரும்பும்நாள் எழுப்புதலின் நாளாய் ஆநேகர் கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராய் ஏற்றுகொள்ளும் நாளாய் மாறும் ஆமென்! 🛐

கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள்
சகோதரன் புருஸ் ராப்சன்
+919703676184

செவ்வாய், 25 ஜூலை, 2017

Disciples of Christ Ministries (DCM) Revival Prayer Points

Disciples of Christ Ministries (DCM) Revival Prayer Points

Dear ones in Christ Greetings in the matchless name of Our Lord and Savior Jesus Christ

Transformation as a Disciple/Follower of Christ

Today’s Prayer Guidelines

Personal Transformation | Should not fall back on old nature | Take help of Holy Ghost to Overcome all the sinful Nature | Resist Sinful nature with Sword the Word of GOD | Meditate the Word of GOD Always

In Christ
Bruce Ropson

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள் எழுப்புதலுக்கான ஜெபக்குறிப்புகள்

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஒப்பற்ற நாமத்தில் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்

கிறிஸ்துவின் சீஷனாய்/பின்பற்றுபவனாய் மாறிட

இன்றைய ஜெபக்குறிப்புக்கள்

தனிப்பட்ட வாழ்வில் மாற்றம் | பழைய பாவபழக்கவழக்கங்களுக்கு திரும்பாமல் இருக்க | பரிசுத்த ஆவியானவரின் துணையோடு எல்லாவித பாவ சுபாவத்தை மேற்கொள்ள | ஆவியின் பட்டயமாகிய வேதவசனத்தினால் பாவ சுபாவத்தை மேற்கொள்ள | வேதத்தை எப்பொழுதும் தியானித்து கொண்டிருக்க

கிறிஸ்துவுக்குள் சகோதரன்
புருஸ் ராப்சன்

https://www.facebook.com/YesuvinSheeshargal/
http://yesuvinsheeshargal.blogspot.in/

சனி, 22 ஜூலை, 2017

Disciples of Christ Ministries (DCM) Revival Prayer Points

Disciples of Christ Ministries (DCM) Revival Prayer Points

Dears ones Christ Greetings in the matchless name of Our Lord and Savior Jesus Christ

Transformation as a Disciple/Follower of Christ

Today’s Prayer Guidelines

Personal Transformation | Walk in love with God's righteousness | Lord our GOD to be praised always even we are afflicted | Always know the will of GOD and act upon accordingly | Worship the Lord with Godly Fear

In Christ
Bruce Ropson

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள் எழுப்புதலுக்கான ஜெபக்குறிப்புகள்

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஒப்பற்ற நாமத்தில் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்

கிறிஸ்துவின் சீஷனாய்/பின்பற்றுபவனாய் மாறிட

இன்றைய ஜெபக்குறிப்புக்கள்

தனிப்பட்ட வாழ்வில் மாற்றம் | தேவநீதியில் பிரியத்தோடு நடக்க | நெருக்கத்திலும் கர்த்தரை துதிக்கும்துதியில் பிரியப்பட | எப்பொழுதும் தேவசித்தம் அறிந்து செயல்பட | தேவபயத்தோடு கர்த்தரை ஆராதிக்க
கிறிஸ்துவுக்குள் சகோதரன்

புருஸ் ராப்சன்

https://www.facebook.com/YesuvinSheeshargal/
http://yesuvinsheeshargal.blogspot.in/

வெள்ளி, 21 ஜூலை, 2017

Disciples of Christ Ministries (DCM) Revival Prayer Points - 21st Jul

Disciples of Christ Ministries (DCM) Revival Prayer Points

Dears ones Christ Greetings in the matchless name of Our Lord and Savior Jesus Christ

Transformation as a Disciple/Follower of Christ

Today’s Prayer Guidelines

Personal Transformation | Do not forget that we are fulfilled with tribulation and commit ourselves to God | Do Not stop the Faithful Obedience Always for GOD | Lovingly accepting the intimacy of brotherly love | Without speaking negative talks, things are not seen as yet but be in Faith on the Promise of GOD

In Christ
Bruce Ropson

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள் எழுப்புதலுக்கான ஜெபக்குறிப்புகள்

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஒப்பற்ற நாமத்தில் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்

கிறிஸ்துவின் சீஷனாய்/பின்பற்றுபவனாய் மாறிட

இன்றைய ஜெபக்குறிப்புக்கள்

தனிப்பட்ட வாழ்வில் மாற்றம் | உபத்திரவத்தினால் பூரணப்படுகிறோம் என்பதை மறவாமல் நம்மை தேவனுக்கு அர்ப்பணித்து நடக்க | உண்மையுள்ள கீழ்ப்படிதலை எப்பொழுதும் தேவனுக்காக விடாதிருக்க | சகோதர சிநேகத்தினால் உண்டாகும் நெருக்கங்களை அன்போடு ஏற்றுக்கொண்டு நடந்திட | எதிர்மறையான பேச்சுக்களை பேசாமல் தற்காலத்தில் கானாதவைகளை விசுவாசத்தோடு பற்றிகொண்டிருக்க

கிறிஸ்துவுக்குள் சகோதரன்
புருஸ் ராப்சன்

https://www.facebook.com/YesuvinSheeshargal/
http://yesuvinsheeshargal.blogspot.in/

வியாழன், 20 ஜூலை, 2017

Disciples of Christ Ministries (DCM) Revival Prayer Points - 20th Jul

Disciples of Christ Ministries (DCM) Revival Prayer Points

Dears ones Christ Greetings in the matchless name of Our Lord and Savior Jesus Christ

Transformation as a Disciple/Follower of Christ

Today’s Prayer Guidelines

Personal Transformation | Seek the Presence of GOD always | Do not spend more time in social media gadgets | Strengthened  by Regular Meditation on Word of GOD | Prepare your ways before the Lord to become Mighty

In Christ
Bruce Ropson

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள் எழுப்புதலுக்கான ஜெபக்குறிப்புகள்

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஒப்பற்ற நாமத்தில் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்

கிறிஸ்துவின் சீஷனாய்/பின்பற்றுபவனாய் மாறிட

இன்றைய ஜெபக்குறிப்புக்கள்

தனிப்பட்ட வாழ்வில் மாற்றம் | தேவப்பிரசன்னத்தை எப்போதும் தேடிட | சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்திட | தேவ வார்த்தையை தவறாமல் தியானித்திட | கர்த்தருக்கு முன்பாக நம் வழிகளை ஆயத்தப்படுத்திட

கிறிஸ்துவுக்குள் சகோதரன்
புருஸ் ராப்சன்

https://www.facebook.com/YesuvinSheeshargal/
http://yesuvinsheeshargal.blogspot.in/ 

வியாழன், 9 மார்ச், 2017

ரேணியஸ் ஐயர்

ரேணியஸ் ஐயர் 5 நவம்பர் 1790 – 5 ஜூன் 1838.



இளமைப்பருவம்  

திருநெல்வேலியின் அப்போஸ்தலன் சார்லஸ் தியோபிளஸ் எவால்டு ரேணியஸ் 5 நவம்பர் 1790 மேற்கு ரஷ்யாவில் உள்ள மேரியன்பெர்டேர் என்கிற ஊரில் பிறந்தார். தனது 6வது வயதில் தந்தையை இழந்தார். 14ம் வயதில் தன் தாய்க்கு உதவ வேலை தேடி எழுத்தர் வேலையில் சேர்ந்தார். ஊதியம் போதவில்லை. இதை அறிந்த இவரின் பெரியப்பா தன் பண்ணையில் ஈடுபடுத்தி தன்னோடு வைத்துக்கொண்டார். ரேனியசோ ஆத்மீக விஷயத்தில் அக்கறையில்லாதவராக இருந்தார்.

இரட்சிப்பின் அனுபவம்

தனது பெரியப்பா வீட்டில் காணப்பட்ட பக்தி வாழ்க்கை அவரை சிந்திக்க வைத்தது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு தன்னை ஒப்புகொடுத்தார்.

ஊழிய அழைப்பும் அர்ப்பணிப்பும்

தேவனால் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டார். மிகுந்த போராட்டத்தின் மத்தியில் கர்த்தருடைய பரம தரிசனத்திற்கு கீழ்ப்படிந்து கர்த்தருக்காக எதாகிலும் செய்ய வேண்டுமே என்கிற ஆவல் கொண்டார் அர்ப்பணித்தார். அந்நாட்காளில் அவர் அதிகமாய் விரும்பி வாசித்தது இந்தியாவில் தரங்கம்பாடியிலுள்ள மிஷனரிகளின் அறிக்கைகளாகும். அதை வாசிக்க வாசிக்க அவருக்குள்ளும் மிஷனெரி தாகம் பற்றிக்கொண்டது, அதனால் கிறிஸ்துவை அறியாத மற்ற தேசங்களுக்கு அவரை அறிவிக்க வேண்டும் என்கிற தாகம் உண்டாயிற்று. இதை குறித்து தன் பெரியப்பாவிடம் தெரிவித்தார். அப்பணிக்கு இறைக்கல்வி முக்கியம் என்று அறிந்து அதற்குரிய ஆயத்தத்தை செய்தார். இதை அறிந்த பெரியம்மா இவரின் இருதயத்தை மாற்ற முயன்று தோற்றுப்போனார். குடும்பப்பணிகளை விட மிஷனெரி பணி முக்கியமா என்று கேட்டார். ரேணியஸ் உடைந்து போனார். அம்மாவும் கடல் கடந்து என்னை விட்டு போய்விடாதே என்று கெஞ்சினார். கர்த்தர் போக சொன்னால் நான் என்ன செய்யக்கூடும் என்றார். அன்று முதல் அவரின் தாயார் அவரை மிஷனெரி ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார். ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் 1812 ரஷ்யாவில் உள்ள லுத்தரன் சபையில் குருப்பட்டம் கொடுக்கப்பட்டது.

மிஷனெரி பயணம்

14/02/1814 ரேணியஸ்ம் செனார் என்பவரும் சென்னைக்கு கப்பல் ஏறினர். 4/07/1814 சென்னை வந்தார் ரேணியஸ். தரங்கம்பாடி சென்று தமிழை கற்கத்தொடங்கினார். ஐந்தே மாதங்களுக்குள் தமிழை வாசிக்கவும் எழுதவும் தெருப்பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். பின்பு சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன்னில் குடியேறினார். தன் வீட்டின் பின்னே உள்ள விக்கிரகங்களை வணங்கும் மக்களுக்கு சுவீஷேச பணியை ஆரம்பித்தார். சிறுபிள்ளைகளுக்கென்று நற்செய்தி பணியை ஆரம்பிக்க ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார். ஞாயிற்றுக்கிழமைகளில் அதில் ஆராதனை நடத்தினார்.


மணவாழ்வு  

ரேணியஸ் ஊழியத்தில் தனக்கு உதவியாய் இருக்க வான் சொமுரன் என்ற   பக்தியுள்ள டச்சு குடும்பத்தை சார்ந்த ஆணி என்கிற பெண்ணை மார்ச் மாதம் 7ம் நாள் மணந்தார். ஆணி அம்மாள் ரேணியஸ்ன் திருப்பணியில் பங்கெடுத்து அவருக்கு உத்தம துணைவியாக விளங்கினார்.

ஊழியத்தின் பாதை

ரேணியஸ் மூன்று பள்ளிகளை ஆரம்பித்தார், அதில் இரண்டு பள்ளிகளில் தமிழிலே பாடங்கள் கற்ப்பிக்கப்பட்டன ஒருபள்ளியில் ஆங்கில மொழியில் கற்ப்பிக்கப்பட வழி செய்தார். தொடர்ந்து சென்ற இடங்களில் எல்லாம் பள்ளிகூடங்கள் நிறுவப்பட்டன. கிறுஸ்தவ ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக ஒரு போதனா முறை காலசாலையை அதாவது செமினேறி ஒன்றை துவக்கினார். 

புதன், 18 ஜனவரி, 2017

குளோரிந்தா அம்மையார்

குளோரிந்தா அம்மையார் (1746 - 1806)

1746ம் ஆண்டு தஞ்சாவூரில் இந்து பிராமண குடும்பத்தில் கோகிலா என்ற பெண் பிறந்தாள். சிறு வயதிலேயே தன் பெற்றோர்களை இழந்ததினால் அவளுடைய தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தாள். அவளுடைய தாத்தா   தஞ்சாவூரிலே மராட்டிய மன்னனாக இருந்த சரபோஜி என்பவரின் அரண்மனையில் பெரிய குருவாக இருந்தார். சிறு வயதிலேயே கோகிலா சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மாராட்டிய மொழிகளை நன்கு கற்று தேர்ந்தாள். தனது 12 – ம் வயதில் ஒரு கோவிலில் மந்திரங்கள் சொல்வதற்க்கு செல்லும் வழியில் ஒரு கொடிய விஷப்பாம்பு அவளை கடித்தது. அப்போது அங்கு வந்த ஆங்கிலேய போர் வீரன் ஜான் லிட்டில்டான் என்பவர்  அவளை காப்பாற்றினார். கோகிலாவின் 13ம் வயதில் மராத்தி பிராமண பண்டிதருடன் திருமணம் முடிந்தது. எதிர்பாராதவிதமாக கோகிலா கணவர் ஓராண்டுக்குள் மரித்துப் போனார். எனவே அப்போது இந்து சமுதாய தர்மத்தின் அடிப்படையில் கணவன் மரித்து விட்டால் அவனோடு உயிரோடு இருக்கும் மனைவியையும் சிதையிலே தள்ளிவிட்டு எரித்து விடுவார்கள். இது சதி அல்லது உடன்கட்டை ஏறுதல் என்பதாகும்.
அவளுடைய கணவனுடைய சிதையில் இவளை ஜனங்கள் தள்ளிவிட எத்தனிக்கும் போது அவள் எழுப்பிய கூச்சலைக் கேட்டு அங்கு வந்த ஆங்லேய கர்னல் ஜான் லிட்டில்டான் மீண்டும் அவளை காப்பாற்றுகிறார். இதை பார்த்து ஆத்திரமடைந்த பிராமண பண்டிதர்கள் கோகிலா ஊருக்குள் வரக்கூடாது என்றும் குடும்பத்தோடு தொடர்பு கொள்ள கூடாது என்றும், யாரவது அவளுக்கு அடைக்கலம் கொடுத்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தனர். எனவே இந்த இளம் விதவையை யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத போது அந்த கர்னல் ஜான் லிட்டில்டான் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். இப்போது இந்த கர்னல் பாளையம்கோட்டைக்கு தஞ்சாவூரிலிருந்து மாற்றப்பட்டார். அங்கு கோகிலாவுக்கு அந்த கர்னல் தன் தாயின் பெயரான கிளராவோடு இந்தியா என்றும் சேர்த்து கிளாரா இந்தியா என்று பெயர் சூட்டினார். காலப்போக்கில் கிளாரிந்தா என்று அழைக்கப்பட்டாள். பின்பு அவளுக்கு ஆங்கிலம் மூலம் இயேசுகிறிஸ்துவை அறிவித்தார் மேலும் திருச்சபைக்கும் அழைத்துச் சென்றார். இப்படியாக குளோரிந்தா இயேசுவின் அன்பை பெற்றவளாக தற்பொழுது கிறிஸ்தவளாக மாற விரும்பினாள்.
இந்த நிலையில் ஆங்கில இராணுவ வீரர்களுக்கு ஊழியம் செய்வதற்காக C.F. ஸ்வாட்ஸ் ஐயர் அவர்கள் தஞ்சாவூருக்கும் பின்னர் திருச்சிக்கும் அனுப்பப்பட்டார். இப்போது இவரை சந்திக்க குளோரிந்தா வந்து தான் கிறிஸ்தவளாக மாற வேண்டும் என்றும் அதற்காக ஞானஸ்தானம் தரும்படியாக கேட்டுக் கொண்ட போது C.F. ஸ்வாட்ஸ் அவர்கள் குளோரிந்தா யார் என்பதை அறிந்துகொண்டு அவள் கர்னல் ஜான் லிட்டில்டான் என்பவரின் மறுமனையாட்டியாய் இருந்ததினால் அவளுக்கு ஞானஸ்தானம் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனாலும் குளோரிந்தா மனம் தளராமல் இயேசுவிடம் தன் குறைகளைக்கூறி ஆறுதலைப் பெற்றுக்கொண்டாள். இந்த சூழ்நிலையில் ஜான் லிட்டில்டான் போரில் மரித்துப்போகவே குளோரிந்தா மீண்டும் விதவையானாள். உலகமே அவளுக்கு சூனியமாக தெரிந்தது. ஆனால் ஆண்டவரின் அன்பும், ஆறுதலும் அரவணைப்பும் அவளுக்கு அதிகமாய் கிடைத்தது.
1778 –ம் ஆண்டு ஒருமுறை C.F. ஸ்வாட்ஸ் ஐயர் அவர்கள் பாளையங்கோட்டைக்கு ஒரு ஐரோப்பிய திருமணம் நடத்தவும் அநேக ஐரோப்பிய குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் கொடுக்கவும் அனுப்பப்பட்டார். அதை கேள்விப்பட்ட குளோரிந்தா மீண்டும் அவரிடம் தனக்கு ஞானஸ்தானம் கொடுக்க விடும்பி கேட்டுக்கொண்டாள். அவளுடைய விசுவாசத்தையும் ஆண்டவர் மீது கொண்ட பற்றையும் அறிந்து குளோரிந்தாவின் 32 – ம் வயதில் 25/02/1778 ஆண்டு அவளுக்கு “ராயல் கிளாரிண்டா” என்று ஞானப் பெயர் சூட்டி ஞானஸ்தானம் கொடுத்தார். குளோரிந்தா மராட்டிய ராஜ் பரம்பரையிலிருந்து வந்ததால் “ராயல்” என்ற பேரை சேர்த்து பெயர் சூட்டினார். குளோரிந்தாவோடு அவர் வீட்டு வேலைக்காரியின் மகன் ஹென்றி (Hendry) என்றும், அந்த வேலைக்காரி சாரா என்றும் ஞானஸ்தானம் பெற்றனர்.
குளோரிந்தா தான் திருநெல்வேலியின் முதல் கிறிஸ்தவள். இப்போது குளோரிந்தா தேவனின் ஊழிய அழைப்பைப் பெற்று திருநெல்வேலியின் முதல் தமிழ் மிஷனெரியாக மாறி ஊழியம் செய்தாள். இரண்டு ஆண்டுக்குள் 40 பேர் ஞானஸ்தானம் பெற்றனர்.
இப்போது ஓலையால் ஒரு ஆராதனைக் கூடத்தை நடத்த ஒழுங்கு செய்து தனது சுவீசேஷ வேலையை செய்ய ஆரம்பித்தாள். பெண்களுக்காக வீட்டு கூட்டம், மற்றும் சிறு பிள்ளைகளுக்கு கல்வி கற்று கொடுக்கவும் ஆரம்பித்தார். குளோரிந்தாவின் ஊழிய வாஞ்சையை பார்த்த அநேக ஆங்கிலேய அதிகாரிகள் உதவியோடு ஒரு சிறிய ஆலயத்தை கட்டி முடித்தாள். 1778 ஆண்டு இந்த ஆலயத்தை C.F. ஸ்வாட்ஸ் ஐயர் அவர்கள் பிரதிஷ்டை செய்து குளோரிந்தா திருச்சபை யென்று திறந்து வைத்தார். ஆனால் திருநெல்வேலி மக்கள் இந்த ஆலயத்தை பாப்பாத்தி அம்மாள் கோயில் என்றே அழைத்தனர்.
குளோரிந்தா ஒரு பிராமண பெண் என்பதால் அநேக பிராமணர்கள் ஆண்டவரை பற்றி அறியலானார்கள். சபை ஊழியராக திரு. சத்திய நாதன் பிள்ளை அவர்களை நியமிக்க C.F. ஸ்வாட்ஸ் ஐயர் அவர்களுக்கு கடிதம் எழுதினார். இதை ஏற்றுக்கொண்டு திருநெல்வேலியின் முதல் சபை ஊழியராக திரு. சத்திய நாதன் பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டு இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக ஊழியம் செய்து வந்தார்கள். இதன் நிமித்தமாக 1802ம் ஆண்டு சபை உறுப்பினர்கள் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் விசுவாசிகளானார்கள். குளோரிந்தா அவர்கள் ஊழியத்தில் ஜாதி, குலம், கோத்திரம், பாலினம் என்று பாகுபாடு பாராமல் ஊழியம் செய்ததினால் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்.

புதிய விசுவாசிகள் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு ஒரு பள்ளிக் கூடம் கட்ட விரும்பி அதை செயல்படுத்தினார். 1787ல் பள்ளி கட்டிமுடிக்கப்பட்டது. அது தான் இன்று செயின்ட் ஜான்ஸ் கல்லூரியாக விளங்குகிறது. ஒதுக்கப்பட்ட மக்களுக்கு என்று தன்னுடைய செலவில் குடிநீர் வழங்க ஒரு கிணறு வெட்டப்பட்டது. இது இன்றும் பாப்பாத்தி அம்மா கிணறு என்று அழைக்கபடுகிறது. இந்நிலையில் திடீரென உடம்பு சரியில்லாமல் 1806 – ம் ஆண்டு தன்னுடைய 60 ம் வயதில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். குளோரிந்தா திருநெல்வேலி மாவட்டத்தின் “மூலைக்கல்” என்று அழைக்கப்பட்டார். திருநெல்வேலி “விடிவெள்ளி” என்றும் போற்றப்படுகின்றார்கள். ஒரு பிரமாண பெண் கிறிஸ்துவுக்காக ஒரு படி எடுத்து விட்டபடியால் இன்னும்  திருநெல்வேலி மக்கள் வாழ்க்கையில் ஏற்றம் கொண்டது. இது எளிதான காரியம் அல்ல. தன்னுடைய வாழ்க்கையில் எல்லா கஷ்டத்தையும் அனுபவித்தார்கள். ஆனாலும் ஒருபோதும் இயேசுவை விட்டதில்லை. தன் வாழ்க்கையை தேவநாம மகிமைக்காய் அர்ப்பணித்தார்கள். தேவன் இவர்கள் மூலமாய் பல ஜனங்களை இரட்சித்தார். நீங்கள் இந்த முதல்படியை எடுத்து வைக்க தயாரா?  

https://www.facebook.com/YesuvinSheeshargal
http://yesuvinsheeshargal.blogspot.in/

வெள்ளி, 6 ஜனவரி, 2017

Disciples of Christ Ministries (DCM) Revival Prayer Points - 6th Jan

Disciples of Christ Ministries (DCM) Revival Prayer Points

Dears ones Christ Greetings in the matchless name of Our Lord and Savior Jesus Christ

Transformation as a Disciple/Follower of Christ

Today’s Prayer Guidelines

Personal Transformation | Understand that GOD not called us unto uncleanness, but unto holiness | Not to Disregard Holy Spirit | Not in the lust of concupiscence | Should not interfere others life but Learn to be quiet and to do our own business | To work with your own hands

In Christ
Bruce Ropson

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

கிறிஸ்துவின் சீசர்கள் உழியங்கள் எழுப்புதலுக்கான ஜெபக்குறிப்புகள்

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஒப்பற்ற நாமத்தில் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்

கிறிஸ்துவின் சீஷனாய்/பின்பற்றுபவனாய் மாறிட

இன்றைய ஜெபக்குறிப்புக்கள்

தனிப்பட்ட வாழ்வில் மாற்றம் | தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல பரிசுத்ததிற்க்கே அழைத்தார் என்று அறிந்து நடக்க | பரிசுத்த ஆவியானவரை அசட்டைபண்ணாதிருக்க | மோகஇச்சைக்கு உட்படாமல் இருக்க | அமைதலாய் இருப்பதை கற்றுக்கொள்ள | மற்றவர்கள் வாழ்வில் தலையிடாமல் அமைதலுள்ளவர்களாய் நம் சொந்த அலுவல்களை பார்த்து நடக்க | சொந்த கையினால் உழைக்கிறவர்காளாய் இருக்க
  
கிறிஸ்துவுக்குள் சகோதரன்
புருஸ் ராப்சன்

https://www.facebook.com/YesuvinSheeshargal

http://yesuvinsheeshargal.blogspot.in/