செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

ஆராதனை / Worship | Serve the Lord

ஆராதனை /  Worship | Serve  the Lord

ஆராதனை என்றால் என்ன?
ஆராதனை என்பதன் நேரடி பொருள் கர்த்தருக்கு ஊழியம் செய்தல் | அர்பணித்தல் | தேவ வார்த்தைக்கு கீழ்படிதல்

கர்த்தரை எப்படி தொழுது கொள்ள வேண்டும்
கர்த்தரையே, கர்த்தரை மாத்திரமே தொழுது கொள்வது ஆராதனையாய் இருக்கிறது. “யோவான் 4: 24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். இவார்த்தையின்படி ஆவியோடும் உண்மையோடும் என்றால் என்ன? வாயினால் சேருகிறது அல்ல முழு இருதயதோடும் கர்த்தரை துதிக்க வேண்டும் மத்தேயு 1 : 8. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.

என்ன சொல்லி தொழுது கொள்ள வேண்டும்
கர்த்தரை தொழுதுகொள்வதென்றால் எனக்கு நன்மை செய்தீர் என்று சொல்லிப்பாடுகிறதை (நன்மை செய்தீரே என்று பாடுகிறது நல்லதுதான் – அப்படி பாடும் போது நன்றி அறிதலுள்ள இருதயத்தை நாம் தேவனிடத்தில் வெளிபடுதுகிறோம் நல்லது தான்) பார்க்கிலும் நாம் துதிக்கும் ஒவ்வொரு துதியும் அவர் நல்லவர் என்பதையும் அவர் வல்லவர் என்பதையும் | அவர் பரிசுத்தமானவர் என்பதையும் அவருடைய பராக்கிரமத்தை பறை சாற்றுகிறதாய் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆராதனையே பரலோகத்தில் நடந்தது | நடந்து கொண்டிருக்கிறது. “ஏசாயா 6: 2. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; 3. ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். 4. கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.தேவனைபற்றி தூதர்கள் பாடின பொழுது வாசல்கள் அசைந்ததை பார்க்கிறோமே, அப்படிபோல நாமும் அவருடைய மகத்துவங்களை குறித்து பாடும்போது தேவ பிரசன்னமும் அவருடைய வல்லமையும் இறங்கி வரும்.

போராட்டங்களில் ஆராதனை
எப்பேர்ப்பட்ட போரட்டங்களாயினும் விடுதலையை பெற்றுகொள்ள வேண்டுமானால் அவரையே உயர்த்துகிற ஆராதனை எறேடுக்கபட வேண்டும்.  யோசபாத் என்கிற ராஜாவின் நாளிலே அவனுக்கு எதிரிகாளால் உண்டான போரின் நெருக்கதிலிருந்தே தேவன் விடுதலை கொடுத்தார் II நாளாகமம் 20 : 19. கோகாத்தியரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள். (தேவனை துதிக்கிறதிலே அசதியாயும் அல்ல சோர்த்த நிலையிலும் அல்ல மகா சத்தத்தோடே இருதயத்தில் மனமகிழ்ச்சியோடு உற்சாகமாய் துதித்தார்கள்)  21. பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகக்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். (இந்த ஸ்தோத்திர பாடலை பாடின பொழுது  தேவன் அவர்களை விடுவித்தார் என்று பார்க்கிறோம்) 22. அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.இங்கே ஜனங்கள் கர்த்தரைமாத்திரம் துதித்ததினாலே தேவகரம் இறங்கி விடுதலை கொடுத்தை பார்க்கிறோம்! இதை வாசிக்கிற உங்களுக்கு இருக்கிற எந்த உபத்திரவமானாலும் | போரட்டங்களானாலும் தேவன் விடுவிக்க வல்லவராயிருக்கிறார் ஆமென்! “எபேசியர் :12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” இவ்வார்த்தையின்படி நமக்கு மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல, அநேக நேரம் நாம் நமக்கு விரோதமாய் வருகிறவர்களை கர்த்தர் அதம்பண்ணி போடுவார் என்று எண்ணிக்கொள்கிறோம், அப்படியல்ல கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்முன் இஸ்ரவேலர்கள் மாத்திரமே தேவனுடைய பில்ளைகளாய் இருந்தார்கள், நாம் யாவரும் அறிந்திருக்கிறபடி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினாலே புறஜாதிகளாய் இருந்த நம்மையும் அவரிடமாய் சேர்த்துக்கொண்டார் ஆமென்! அப்படிபோல எல்லாரும் இரட்சிக்கபட வேண்டும் என்பது தேவசித்தமாய் இருக்கிறது! நமக்கு எப்படி கிருபை உண்டகியிருக்கிறதோ அப்படிபோலவே இன்னும் காணியாட்சிக்கு புறம்பாய் இருப்பவர்களுக்கும் கிருபை உண்டு என்பதை மறந்து போக வேண்டாம்! அதை பூரண விசுவாசத்தோடு எண்ணிவர்களாய் மனிதர்கள் மூலம் உண்டாகிற போராட்டங்களுக்காக தேவனிடத்தில் அவருடைய கிருபையை உங்களோடு போடுகிறவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டுமே என்று அவரிடத்தில் பரிந்து பேசுகிரவர்களாய் மாறுவோம். தேவன் இப்படிப்பட்ட சுயம் சாகிற அனுபவத்தை இதை வாசிக்கிற ஒவொருவருக்கும் தந்தருளுவாராக ஆமென்!

புத்தியுள்ள ஆராதனை
நாம் ஏறெடுக்கும் எந்த ஆராதனையும் ஏற்றுகொள்ளப்படுகிறதற்க்கு “புத்தியுள்ள ஆராதனை” ஏறெடுக்கப்பட வேண்டும். “ரோமர் 12 : 1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. பரிசுத்தம் என்பது நம்முடைய பார்வையில் – இச்சை இல்லாத பார்வை | உடையில் – நன்கு அழகாக உடுதுகிறது நல்லதுதான் ஆனாலும் எதிர்பாலர் இடறுகிறது போன்ற உடை (உடலை ஒட்டி இருக்கிறது போன்ற) உடுத்துதலை தவிர்த்தல் நல்லது ஏனென்றால் – “லூக்கா 17:1 இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” அநேக பிரசங்ககளை கேட்டிருந்தும் அல்லது தேவவார்தைகளையும் வாசித்திருந்தும் அதன் படி நடக்காமல் போனால் பரலோக இராஜ்ஜியம் தேவவார்த்தைக்கு கீழ்படியாதவர்களுக்கு இல்லை! இல்லை! இல்லை!.

சுவிசேஷத்தின் மூலம் ஆராதனை
தேவனை மற்றவர்களும் அல்லது ஒருமுறைதானும் கேள்விபட்டிறாதவர்களும்   தொழுது கொள்ள வைக்கும் ஆராதனை எப்படியெனில் “ரோமர் 10: 12. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். 13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். 14. அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? 15. அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.” ஒருமுறை தானும் ஆண்டவரை குறித்து கேள்விப்பட்டிறாதவர்களுக்கு அல்லது கேள்விபட்டிருந்தும் அவரை அறிய வேண்டிய விதமாய் அறியததினாலே அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களும் நம் மத்தியில்/அருகில் அநேகர் உண்டே, அவர்களுக்கு தேவனைபற்றி அறிவித்தோமா? அல்லது என்னுடைய/நம்முடைய கிறிஸ்துவை பற்றும் வாழ்க்கை அவர்களை கிறிஸ்துவினன்டை இழுத்து கொள்ளும்படியான வாழ்வு நான் வாழ்கிறேனா? நம்முடைய பொறுமையா அல்லது கோபமான பேச்சுக்களா | அன்புநிறைந்த வாழ்க்கையா அல்லது எரிச்சலுள்ள பேச்சுக்களா? கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபின் எப்படி இருக்கிறது நம் வாழ்க்கை? நம்மை நாமே சோதித்து அறிவோமா? கர்த்தரை அறிந்து இத்தனை ஆண்டுகளில் எத்தனைபேருக்கு கர்த்தரை பற்றி அறிவித்தோம்? இன்னும் எனக்கே வேறொருவரின் ஆறுதல் தேவைபடுகிறதே, அப்படியிருக்க நான் எப்படி மற்றவர்களுக்கு கிறிஸ்துவின் ஆறுதலை சொல்லுவேன் என்று எண்ணுகிறீர்களோ? அல்லது எனக்கு வேதத்தை பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொல்லுகிறீர்களோ? அப்படியென்றால் தேவன் தேடும் நபர் நீங்கள் தான்!  
I கொரிந்தியர் 1:26. எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.இப்படிப்பட்ட தேவனுடைய தெரிந்து கொள்ளுதலுக்காக ஸ்தோத்திரம்! ஆதலால் எதோ ஒரு காரணம் சொல்லி தப்பிவிடவும் முடியாதே! நான் பெற்றுக்கொண்ட உன்னததேவனின் ஆராதனையை அவர்களும் பெற்றுகொள்ளவேண்டுமே என்கிற ஏக்கத்தோடு செயல்பட்டால் நிச்சயம் நம் தேசம் தேவனை அறிந்திடுமே! இப்படிப்பட்ட ஆராதனையில் தேவன் பிரியமாயிருக்கிறார் என்பதை மறந்திட வேண்டாம். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.
கிருபையாவரோடும் இருப்பதாக!ஆட்டுகுட்டியானவருக்கே எல்லா துதியும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக! ஆமென்.

கருத்துகள் இல்லை: