சத்துருக்களைச் சிநேகியுங்கள்
அன்பு சகோதர சகோதரிகளுக்கு, நாம் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின் படியே செய்திட கடனாளிகளாய் இருக்கிறோம்.
மத்தேயு 5 : 44 & 45. “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” – இந்த வசனத்தின்படி நாம் நம்மை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிப்போம், கர்த்தர் யாவையும் நன்மையாகவே செய்து முடிப்பார். உலகத்தவர்களுடைய காரியங்களையும் நம்முடையவைகளையும் ஓப்பிடுவது வேத வசனத்தின் படி சரியானது அல்ல.
யோவான் 15:17- 21 “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.” – இவ்வசனத்தின்படி நாம் கேள்விபடுகிற அல்லது நமக்கு சம்பவிக்கிற காரியங்களுக்காய் கர்த்தர் இவைகளை குறித்து முன்னறிவித்தபடியே நடக்கிறபடியால் கர்த்தரை ஸ்தோத்திரம் பண்ணுவோம். எழுப்புதலின் அக்கினி நம் தேசத்தில் பரவுகிறதற்காய் தேவன் சபையின் துன்பத்தை அனுமதிகிறதற்காய் ஸ்தோத்திரம் பண்ணுவோம்! கிருபையாவரோடும் இருப்பதாக!ஆட்டுகுட்டியானவருக்கே எல்லா துதியும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக ஆமென்!
Disciples of Christ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக