வெள்ளி, 28 அக்டோபர், 2016

கிருஸ்தவர்கள் தீபாவளி கொண்டாடலாமா

கிருஸ்தவர்கள் தீபாவளி கொண்டாடலாமா

தீபாவளி என்பது  கடவுள் அவதாரமெடுத்து தீமையை அழித்து அல்லது துன்மார்க்கனை அழித்து ஜனங்களை விடுதலை அல்லது காப்பற்றியதாக சொல்லுகிறார்கள்! இப்படியிருக்க கிருஸ்தவர்காளாகிய நாம் இப்படிப்பட்ட கொண்டாட்டங்களில் பங்குகொள்ளலாமா? அல்லது வாழ்த்துதல் சொல்லலாமா? அன்பான கர்த்தருடைய பிள்ளைகளே இதை சற்று சிந்தித்து பார்க்கும்படி வேண்டுகிறேன்! கிறிஸ்தவம் என்பது சத்துருக்களையும் சிநேகிக்க சொல்லுகிற அன்பின் மார்க்கம்! நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கும்போதும்கூட தன்னை சிலுவைவில் அறைந்தவர்களை மன்னிதாரே! அதுமட்டுமல்ல தன்னை மறுதலித்தவனை  தேடிப்போய் அவனில் அன்புகூர்ந்தாரே! பாவி அல்லது துன்மார்க்கன் மனம் திரும்புவதையே எதிர்பார்க்கிறேன் என்று பாவிகளை நேசிக்கும் அன்பு வேறே எந்த தெய்வத்திடத்தில் உண்டு, நம் கர்த்தராகிய இயேசுவை தவிர!  இதுவல்லவோ கிறிஸ்துவை பின்பற்றுகிறேன் என்று சொல்லுகிறவர்கள் செய்யவேண்டிய காரியம்! அப்படியிருக்க பிரியமானவர்களை ஒரு துன்மார்கனின் மரணத்தை கொண்டாடுகிறவர்களுக்கு வாழ்த்து சொல்லுவோமானால் நம்மிடத்தில் தேவ அன்பு இல்லையே! ஏனென்றால் நீதிமான்கள் ஒருவனாகிலும் இல்லையே! எல்லாரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானோம் (ரோமர் 3: 23) என்று வேதம் சொல்லியிருக்க அவருடைய வார்த்தையின்படி நானும் நீங்களும் பிரதான பாவியாய் இருந்தபோதல்லவா என்னை/நம்மை தேடி வந்து அவருடைய அன்பை எனக்கு/நமக்கு காண்பித்தார். நான் பெற்றுக்கொண்ட இத்தனை பேரிதான இரட்சிப்பை, பாவத்தில் துன்மார்க்கத்தில் இருப்பவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டுமே என்கிற தாகம் உண்டோ? இல்லை நான் இரட்சிக்கப்பட்டேன்! தேவன் என்னை நேசித்தார் என் மீது கிருபை வைத்தார் ஆகையினால் நான் பரலோகம் போவேன் என்று சொல்வது மாத்திரம் அல்ல பாவத்தில் இருப்பவர்கள் மனம் திரும்பவில்லை என்றால் நரகம் போவார்கள் என்று சொல்லி நாம் அவர்களை தப்புவிக்கவேண்டுமே என்கிற எண்ணம் இல்லதவர்களாய் இருக்கிறோமா? எப்படி இருக்கிறோம்! அவர் (கர்த்தராகிய இயேசு கிறிஸ்து) நான் பாவத்தில் இருக்கும்போது என்னை தேடி வந்தாரே! அப்படிப்போல தேவ அன்பு இன்னும் பாவத்தில் இருப்பவர்களை தப்புவிபதற்க்கு கிருபை இன்னும் இருக்கிறதே! ஆகவே காரியம் என்னவென்றால் பாவத்தில் இருப்பவர்களை மான்னிப்போம் கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதுபோல நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொளுங்கள் (ரோமர் 15:7) ஆனாலும் அவர்களின் தாறுமாறான வழிகளை அல்ல! கிறிஸ்து நமக்குள்ளே இருக்கிறார் என்கிற விசுவாசம் நம்மிடத்தில் பூரணப்படுமானால் (ரோமர் 6:14) ....கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது
துன்மார்க்க ஜீவியத்தை தேவன் வெறுக்கிறார் ஆனால் துன்மார்க்கனை அல்ல! பாவியை/துன்மார்க்கனை மனம் திரும்ப அழைக்கவந்தார் ஆமென்! அவருடைய வருகைவரையிலும் இந்த கிருபை உண்டல்லவோ! இதனை நாம் கருத்தில்கொண்டு ஒருவரிலொருவர் அன்பு கூறுவோமாக! ஆமென்!
புரஜாதிகளின் மார்க்கத்தை கற்றுக்கொள்ளதிருங்கள்! 

தேவக்கிருபை நம் யாவரோடும் இருப்பதாக ஆமென்! ஆட்டுகுட்டியானவருக்கே எல்லா துதியும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக! ஆமென்!
Disciples of Christ Ministries - DCM

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

பேசும் | வழிநடத்தும் தேவன்

பேசும்/வழிநடத்தும் தேவன்

“ஏசாயா 30: 21. “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.””

பிரியமானவர்களே! கர்த்தராகிய ஆண்டவர் நம் ஓவ்வொருவருக்கும் தந்திருக்கிற மகா பெரிய வாக்குத்தத்தம் என்னவென்றால், நாம் நடக்கும் வழியில் திசைமாறுகிற சூழ்நிலை வரும்பொழுது  அவருடைய சத்தத்தை கேட்போம் ஆமென்! ஒருவேளை நமக்கு ஒரு கேள்வி உண்டாகலாம், ஆண்டவர் எபோழுதும் என்னோடு பேசுவாரா? ஆம் அவர் பேசுகிற தெய்வம் அவர் மாறாதவர் உயிரோடு இருக்கிறார். அதற்கு நாங்கள் சாட்சிகள் ஆமென்! கர்த்தருடைய புஸ்தகமாகிய வேதாகமத்தில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன் வரை தேவன் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருசில மனிதர்கள் மூலம் மற்ற ஜனங்களோடு இடைபட்டார் அல்லது பேசினார். ஆனால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்து பரமேறின பின் அவரால் வாகுத்தத்தமாய் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் வந்து அவரை விசுவாசிக்கிற எல்லாரோடும் பேசுகிறவராய்/ஒவ்வொருவரையும் வழி நடத்துகிறவராய் கொடுக்கப்பட்டும் இருக்கிறார் ஆமென்! 
 
ஆவியானவர் என்ன செய்வார்!

யோவான் 16:  “7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்
.ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வாக்குத்தத்தம் செய்தபடியே தேற்றரவாளன் கொடுக்கப்பட்டார் ஆமென்! “யோவான் 16: 8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.” ஆவியானவர் ஒரு மனிதனுக்குள் வந்து வாசம் பண்ணும் போது அவர் செய்கிற மூன்று காரியங்கள் உண்டு பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தை கண்டித்து உணர்த்துவார், என்பதை, நான் ஆவியானவரை பெற்றுக்கொண்டதால் அவர் எண்ணிலிருந்து உலகத்தை கண்டித்து உணர்த்துவார் என்று நாம்மில் பலர் நினைக்கிறோம் – உண்மைதான் ஆனாலும் முதலாவது நம்மில் பாவமில்லாத நடக்கையை குறித்தும் நாம் தேவ நீதியின்படி நடக்கிறதை பற்றியும், அப்படி அவர் சொல்லுகிறதை கீழ்ப்படிந்து நடக்கவில்லையென்றால் நியாயதீர்ப்பை குறித்தும் நம்மிடம் கண்டித்து உணர்த்துவார் என்பதை அநேக நேரம் மறந்துபோகிறோம் “ரோமர் 2 : 21. இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா?   ஆகவே மிகுந்த கவனத்தோடு ஆவியானவர் சொல்லுகிறதை அது மற்றவர்களுக்காகவே சொன்னாலும் நாமும் அப்படிப்பட்ட காரியத்திலிருக்கிறோமா என்று நம்மை நாமே சோதித்து அறிந்தால் நலமாயிருக்குமே! அதற்காய்  பிராயசப்படுவோம் தேவன் ஒவ்வொருவருக்கும் அப்படிப்பட்டக்கிருபையை தருவாராக ஆமென்!
“யோவான் 16:  9. அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், 11. இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்”. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கவில்லையென்றால் அது பாவம் என்பதையும் விசுவாசியாதவர்கள் அடையப்போகிற ஆக்கினையை குறித்தும் கண்டித்து உணர்த்துவார் “யோவான் 16: 10. நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், தேவனுடைய நீதியான கிரியைகளை குறித்தும் ஒவ்வொரு காரியத்திலும் அல்லது செய்கையிலும் முக்கியமாக நம்முடைய தினசரி நடக்கையிலும் சொல்லித்தந்து நடத்துவார்! எப்படியென்றால் நாம் செல்லுகிற வழியில் ஒரு பிச்சையெடுக்கும் நபரை பார்ப்போமென்றால் ஆவியானவர் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்யும்படி நம்மை தேவவார்தையின்படி நமக்கு நினைப்பூட்டி நம்மை நடத்துவார். “உபாகமம் 15 : 11. தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.” ஆமென்!

“யோவான் 16: 13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்”. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் தாம் கேள்விப்பட்டவைகளையே கற்றுதந்து அனுதினமும் சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துகிறவராயிருக்கிறார்.

தேவனுடைய புத்திரர்கள்

 “ரோமர் 8 : 14. மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.” நாம் ஆவியினாலே நடத்தப்படுவோமானால் தேவபுத்திரராய் இருக்கிறோம். அப்படி நடத்தப்படாத பட்சத்தில் நாம் தேவபுத்திரர்கள் அல்ல, ஆகவே ஆவியானவரை பெற்றிருக்கிறேன் என்று சொல்லுகிற தேவ பிள்ளைகளே! தேவன் உங்களை நடத்துகிற அனுபவம் உண்டா? சற்று ஆராய்ந்து பார்ப்போம்! அப்படி தேவன் நடத்துகிற பட்சத்தில் மற்றவர்களை நாடித்தேடி ஆண்டவர் எனக்கு என்ன தீர்க்கதரிசனம் சொல்லுவார் என்று தேடி ஓடவேண்டிய அவசியமில்லையே! சற்று நிதானித்து அறிந்து பார்ப்போம்! தேவனுடைய வார்த்தை ஆம் என்றும் ஆமென் என்றும் இருகிறதே! வழி இதுவே என்கிற சத்தம் கேட்கவேண்டும் அல்லவோ! தேவன் பேசுகிறவராய் இருக்கிறாரே! அவருடைய சத்திய வேதத்தை நாம் வாசித்து தியானிக்கும்போது அவருடைய வேதம் நமக்கு வெளிச்சமாய் மனமகிழ்ச்சியாய் இருக்கிறதே! உபாகமம் 6: 6. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது. 7. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, இப்படிபோல எப்பொழுதும் தேவனுடைய வார்த்தைகளை இருதயத்தில் வைத்து அதேயே தியானிக்கும் போது, அந்த வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கும்போது அந்த வார்த்தைகள் நமக்கு ஜீவனுயும், ஓவ்வொரு நேரமும் நமது வாழ்வுக்கு வேண்டிய ஆலோசனையும் தந்து நடத்துகிறதாயும் இருக்குமே!  அந்த வார்த்தைகள் நம் இருதயத்தில் பெலன்கொள்ள செய்து நடத்துகிறதாயிருகிறதே! தேவனுக்கே மகிமையுண்டாவதாக ஆமென்! இன்றே ஆவியானவரின் பூரணநடத்துதலுக்கு நம்மை ஒப்புகொடுப்போம்! ஒவ்வொரு காரியத்திலும் அவர் நம்மை நடத்தும்படி அவருடைய சத்தத்தை கேட்கிறதற்கு நம்மை ஒப்புகொடுபோமா? 


கிருபையாவரோடும் இருப்பதாக!ஆட்டுகுட்டியானவருக்கே எல்லா துதியும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக! ஆமென்!



செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

ஆராதனை / Worship | Serve the Lord

ஆராதனை /  Worship | Serve  the Lord

ஆராதனை என்றால் என்ன?
ஆராதனை என்பதன் நேரடி பொருள் கர்த்தருக்கு ஊழியம் செய்தல் | அர்பணித்தல் | தேவ வார்த்தைக்கு கீழ்படிதல்

கர்த்தரை எப்படி தொழுது கொள்ள வேண்டும்
கர்த்தரையே, கர்த்தரை மாத்திரமே தொழுது கொள்வது ஆராதனையாய் இருக்கிறது. “யோவான் 4: 24. தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். இவார்த்தையின்படி ஆவியோடும் உண்மையோடும் என்றால் என்ன? வாயினால் சேருகிறது அல்ல முழு இருதயதோடும் கர்த்தரை துதிக்க வேண்டும் மத்தேயு 1 : 8. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது.

என்ன சொல்லி தொழுது கொள்ள வேண்டும்
கர்த்தரை தொழுதுகொள்வதென்றால் எனக்கு நன்மை செய்தீர் என்று சொல்லிப்பாடுகிறதை (நன்மை செய்தீரே என்று பாடுகிறது நல்லதுதான் – அப்படி பாடும் போது நன்றி அறிதலுள்ள இருதயத்தை நாம் தேவனிடத்தில் வெளிபடுதுகிறோம் நல்லது தான்) பார்க்கிலும் நாம் துதிக்கும் ஒவ்வொரு துதியும் அவர் நல்லவர் என்பதையும் அவர் வல்லவர் என்பதையும் | அவர் பரிசுத்தமானவர் என்பதையும் அவருடைய பராக்கிரமத்தை பறை சாற்றுகிறதாய் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆராதனையே பரலோகத்தில் நடந்தது | நடந்து கொண்டிருக்கிறது. “ஏசாயா 6: 2. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; 3. ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். 4. கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது.தேவனைபற்றி தூதர்கள் பாடின பொழுது வாசல்கள் அசைந்ததை பார்க்கிறோமே, அப்படிபோல நாமும் அவருடைய மகத்துவங்களை குறித்து பாடும்போது தேவ பிரசன்னமும் அவருடைய வல்லமையும் இறங்கி வரும்.

போராட்டங்களில் ஆராதனை
எப்பேர்ப்பட்ட போரட்டங்களாயினும் விடுதலையை பெற்றுகொள்ள வேண்டுமானால் அவரையே உயர்த்துகிற ஆராதனை எறேடுக்கபட வேண்டும்.  யோசபாத் என்கிற ராஜாவின் நாளிலே அவனுக்கு எதிரிகாளால் உண்டான போரின் நெருக்கதிலிருந்தே தேவன் விடுதலை கொடுத்தார் II நாளாகமம் 20 : 19. கோகாத்தியரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள். (தேவனை துதிக்கிறதிலே அசதியாயும் அல்ல சோர்த்த நிலையிலும் அல்ல மகா சத்தத்தோடே இருதயத்தில் மனமகிழ்ச்சியோடு உற்சாகமாய் துதித்தார்கள்)  21. பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகக்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். (இந்த ஸ்தோத்திர பாடலை பாடின பொழுது  தேவன் அவர்களை விடுவித்தார் என்று பார்க்கிறோம்) 22. அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.இங்கே ஜனங்கள் கர்த்தரைமாத்திரம் துதித்ததினாலே தேவகரம் இறங்கி விடுதலை கொடுத்தை பார்க்கிறோம்! இதை வாசிக்கிற உங்களுக்கு இருக்கிற எந்த உபத்திரவமானாலும் | போரட்டங்களானாலும் தேவன் விடுவிக்க வல்லவராயிருக்கிறார் ஆமென்! “எபேசியர் :12. ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” இவ்வார்த்தையின்படி நமக்கு மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல, அநேக நேரம் நாம் நமக்கு விரோதமாய் வருகிறவர்களை கர்த்தர் அதம்பண்ணி போடுவார் என்று எண்ணிக்கொள்கிறோம், அப்படியல்ல கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்முன் இஸ்ரவேலர்கள் மாத்திரமே தேவனுடைய பில்ளைகளாய் இருந்தார்கள், நாம் யாவரும் அறிந்திருக்கிறபடி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினாலே புறஜாதிகளாய் இருந்த நம்மையும் அவரிடமாய் சேர்த்துக்கொண்டார் ஆமென்! அப்படிபோல எல்லாரும் இரட்சிக்கபட வேண்டும் என்பது தேவசித்தமாய் இருக்கிறது! நமக்கு எப்படி கிருபை உண்டகியிருக்கிறதோ அப்படிபோலவே இன்னும் காணியாட்சிக்கு புறம்பாய் இருப்பவர்களுக்கும் கிருபை உண்டு என்பதை மறந்து போக வேண்டாம்! அதை பூரண விசுவாசத்தோடு எண்ணிவர்களாய் மனிதர்கள் மூலம் உண்டாகிற போராட்டங்களுக்காக தேவனிடத்தில் அவருடைய கிருபையை உங்களோடு போடுகிறவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டுமே என்று அவரிடத்தில் பரிந்து பேசுகிரவர்களாய் மாறுவோம். தேவன் இப்படிப்பட்ட சுயம் சாகிற அனுபவத்தை இதை வாசிக்கிற ஒவொருவருக்கும் தந்தருளுவாராக ஆமென்!

புத்தியுள்ள ஆராதனை
நாம் ஏறெடுக்கும் எந்த ஆராதனையும் ஏற்றுகொள்ளப்படுகிறதற்க்கு “புத்தியுள்ள ஆராதனை” ஏறெடுக்கப்பட வேண்டும். “ரோமர் 12 : 1. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. பரிசுத்தம் என்பது நம்முடைய பார்வையில் – இச்சை இல்லாத பார்வை | உடையில் – நன்கு அழகாக உடுதுகிறது நல்லதுதான் ஆனாலும் எதிர்பாலர் இடறுகிறது போன்ற உடை (உடலை ஒட்டி இருக்கிறது போன்ற) உடுத்துதலை தவிர்த்தல் நல்லது ஏனென்றால் – “லூக்கா 17:1 இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” அநேக பிரசங்ககளை கேட்டிருந்தும் அல்லது தேவவார்தைகளையும் வாசித்திருந்தும் அதன் படி நடக்காமல் போனால் பரலோக இராஜ்ஜியம் தேவவார்த்தைக்கு கீழ்படியாதவர்களுக்கு இல்லை! இல்லை! இல்லை!.

சுவிசேஷத்தின் மூலம் ஆராதனை
தேவனை மற்றவர்களும் அல்லது ஒருமுறைதானும் கேள்விபட்டிறாதவர்களும்   தொழுது கொள்ள வைக்கும் ஆராதனை எப்படியெனில் “ரோமர் 10: 12. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். 13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். 14. அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? 15. அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.” ஒருமுறை தானும் ஆண்டவரை குறித்து கேள்விப்பட்டிறாதவர்களுக்கு அல்லது கேள்விபட்டிருந்தும் அவரை அறிய வேண்டிய விதமாய் அறியததினாலே அவரை ஏற்றுக்கொள்ளாதவர்களும் நம் மத்தியில்/அருகில் அநேகர் உண்டே, அவர்களுக்கு தேவனைபற்றி அறிவித்தோமா? அல்லது என்னுடைய/நம்முடைய கிறிஸ்துவை பற்றும் வாழ்க்கை அவர்களை கிறிஸ்துவினன்டை இழுத்து கொள்ளும்படியான வாழ்வு நான் வாழ்கிறேனா? நம்முடைய பொறுமையா அல்லது கோபமான பேச்சுக்களா | அன்புநிறைந்த வாழ்க்கையா அல்லது எரிச்சலுள்ள பேச்சுக்களா? கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபின் எப்படி இருக்கிறது நம் வாழ்க்கை? நம்மை நாமே சோதித்து அறிவோமா? கர்த்தரை அறிந்து இத்தனை ஆண்டுகளில் எத்தனைபேருக்கு கர்த்தரை பற்றி அறிவித்தோம்? இன்னும் எனக்கே வேறொருவரின் ஆறுதல் தேவைபடுகிறதே, அப்படியிருக்க நான் எப்படி மற்றவர்களுக்கு கிறிஸ்துவின் ஆறுதலை சொல்லுவேன் என்று எண்ணுகிறீர்களோ? அல்லது எனக்கு வேதத்தை பற்றி ஒன்றுமே தெரியாது என்று சொல்லுகிறீர்களோ? அப்படியென்றால் தேவன் தேடும் நபர் நீங்கள் தான்!  
I கொரிந்தியர் 1:26. எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.இப்படிப்பட்ட தேவனுடைய தெரிந்து கொள்ளுதலுக்காக ஸ்தோத்திரம்! ஆதலால் எதோ ஒரு காரணம் சொல்லி தப்பிவிடவும் முடியாதே! நான் பெற்றுக்கொண்ட உன்னததேவனின் ஆராதனையை அவர்களும் பெற்றுகொள்ளவேண்டுமே என்கிற ஏக்கத்தோடு செயல்பட்டால் நிச்சயம் நம் தேசம் தேவனை அறிந்திடுமே! இப்படிப்பட்ட ஆராதனையில் தேவன் பிரியமாயிருக்கிறார் என்பதை மறந்திட வேண்டாம். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.
கிருபையாவரோடும் இருப்பதாக!ஆட்டுகுட்டியானவருக்கே எல்லா துதியும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக! ஆமென்.

புதன், 27 ஜூலை, 2016

சத்துருக்களைச் சிநேகியுங்கள்

சத்துருக்களைச் சிநேகியுங்கள்

அன்பு சகோதர சகோதரிகளுக்கு, நாம் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின் படியே செய்திட கடனாளிகளாய் இருக்கிறோம். 
மத்தேயு 5 : 44 & 45. “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” – இந்த வசனத்தின்படி நாம் நம்மை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிப்போம், கர்த்தர் யாவையும் நன்மையாகவே செய்து முடிப்பார். உலகத்தவர்களுடைய காரியங்களையும் நம்முடையவைகளையும் ஓப்பிடுவது வேத வசனத்தின் படி சரியானது அல்ல.
யோவான் 15:17- 21 “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.” – இவ்வசனத்தின்படி நாம் கேள்விபடுகிற அல்லது நமக்கு சம்பவிக்கிற காரியங்களுக்காய் கர்த்தர் இவைகளை குறித்து முன்னறிவித்தபடியே நடக்கிறபடியால் கர்த்தரை ஸ்தோத்திரம் பண்ணுவோம். எழுப்புதலின் அக்கினி நம் தேசத்தில் பரவுகிறதற்காய் தேவன் சபையின் துன்பத்தை அனுமதிகிறதற்காய் ஸ்தோத்திரம் பண்ணுவோம்! 
கிருபையாவரோடும் இருப்பதாக!ஆட்டுகுட்டியானவருக்கே எல்லா துதியும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக ஆமென்!

Disciples of Christ

பாவத்தின் இருள் பற்றிக்கொள்வதில்லை

பாவத்தின் இருள் பற்றிக்கொள்வதில்லை

யோவான் 1:4. அவருக்குள் (கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்) ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. 5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. பிரியமானவர்களே! இந்த தேவ வார்த்தையின் மூலம் (“Disciples of Christ” “கிறிஸ்துவின் சீசர்கள்”) உங்களை சந்திப்பதில் பெருமகழ்ச்சி அடைகிறேன்! 

கர்த்தரின் கிருபை உங்களோடிருப்பதாக! நம் கிறிஸ்தவ வாழ்வின் அச்சாரமான கர்த்தரின் ஒளியையை அல்லது அந்த ஒளி நம் வாழ்வில் என்ன செய்யும் என்பதை நாம் சரியாய் அறிந்துகொள்ள தேவன் நமக்கு உதவி செய்வாராக. யோவான் 1:4 இன்படி அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் தான் மனுஷருக்கு ஒளியாய் இருந்தது என்று பார்க்கிறோம். கிறிஸ்துவை தன் வாழ்வில் சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டவர்களுக்கு அவரே/அவருடைய ஜீவனே ஒளியாயிருகிறது. 

அது மட்டுமல்ல “எபேசியர் 5:8. முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்;” இந்த வேத வார்த்தையின்படி கிறிஸ்து நமக்குள்ளே வெளிச்சமாய் மாறுகிறதற்கு முன்னே நாம் இருளில் அல்லது அந்தகாரத்தில் இருந்தோம் அல்லவா! யோவான் 1:5 இன்படி அந்த ஒளி இருளிலே அதாவது இருளாய் இருந்த நம்மிடத்திலே பிரகாசிக்கிறது! ஆமென்! என்னில்/நம்மில் இருந்த இருள் அந்த ஜீவ ஒளியை பற்றிக்கொள்ளவில்லை. மாறாக அந்த ஒளியானது என்னில்/நம்மில் பிரகாசிக்கிறதாயிருகிறது கர்த்தருக்கே மகிமையுடாவதாக ஆமென்! இப்படியிருக்க பிரியமானவர்களே! என்னில் உள்ள இருளாயிருக்கிற பாவம் என்னை மேற்கொள்ள மாட்டது ஏனென்றால் “ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.” ஆமென்! ஒரு காரியத்தை சற்று நிதானித்து அறியும்படி வேண்டிக்கொள்கிறேன், கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலே வாழ்ந்தபோது அவர் பாவிகளோடு சஞ்சரித்தார் ஆனாலும் அவரை பாவம் ஆண்டுகொள்ளவில்லை மாறாக பாவத்திலிருந்தவர்களுடைய வாழ்கை மாறியதே! இன்று பொதுவான ஒரு கருத்து தேவஜனங்களிடம் இருக்கிறது, அது என்னவேன்றால், பாவத்தில் இருக்கிற மனிதர்களிடம் நாம் பேசினாலோ அல்லது பழகினாலோ நாமும் பாவத்தில் சிக்கிக்கொள்வோம் என்று அஞ்சுகிறோம், இந்த அச்சம் அப்படியே சம்பவிக்கவும் செய்கிறது ஏனென்றால் தேவனுடைய வார்த்தையின் வல்லமை அல்லவோ “மத்தேயு 9:29 உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். மத்தேயு 8:13” தேவபிள்ளைகளாகிய நாம் எதை விசுவாகிறோமோ அப்படியே சம்பவிக்குமே! பாவத்தில் இருப்பவர்களோடு நாம் பழகினால் அந்த பாவம் நம்மையும் பிடிக்குமே என்று அபோஸ்தலர்களோ அல்லது மிஷ்னரிகளோ எண்ணியிருப்பார்களானால் அவர்கள் எல்லாதேசங்களுக்கும் போய் கிறிஸ்துவை பிரசங்கித்ருக்கமாட்டார்களே, ஆகமொத்தத்தில் உலகத்தார்கள் பேசுகிறபடி நாமும் சாய்ந்து போனதினால் அல்லவோ ஆதிவிசுவாசம் மறக்கடிக்கபட்டு போயிற்று, அதனால் அல்லவோ கிறிஸ்துவை நம் வாழ்வில் காண்பிக்கவும் அறிவிக்கவும் தவறிவிட்டோம்! சத்துருவின் இந்த கொடிய தந்திரத்தில் அமிழ்ந்து போன நிலைகளை அறிந்து இப்பொழுதே எழுந்திருப்போம்! தேவகிருபை நம்மை தாங்கி நடத்துவதாக ஆமென்!
ஒருவேளை இந்த நாளிலே என்னால் குறிப்பிட்ட இந்த பாவத்தை விடமுடியவில்லையே என்று ஏங்கிகொண்டிருகிறீர்களோ பிரியமானவர்களே, இன்றே தேவனுடைய வார்த்தையை விசுவாசத்தோடு பின்வரும் படியாக அறிக்கை பண்ணுவோமா “கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னில் இருக்கிறபடியால் என்னை பாவம் மேற்கொள்ளுவதில்லை” “நீதிமொழிகள் 18: 21. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.” யின்படி விசுவாச வார்த்தைகளையே சொல்லுவோம் அவிசுவாசமான அல்லது என் விசுவாசவாழ்கையை பதிக்கிற எந்த வார்த்தையையும் நம் வாயினாலே சொல்லாமல் இருப்போம். எனவே கர்த்தாகியே இயேசுகிறிஸ்து என்னில்/நம்மில் இருக்கிற படியால் நான் பாவத்தில் விழுவதில்லை மாறாக பாவத்தில் இருப்பவர்களை அவருடைய நாமத்தினால் விடுவிப்பேன் ஆமென்!
I யோவான் 3:8. பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
பிசாசின் கிரியைகளை என்னிலிருந்தும் உலகத்திருந்து அழிக்கும்படிக்கே தேவகுமாரன் வெளிப்பட்டார் என்று பூரணமாய் விசுவாசிக்கிறேன் ஆமென்!
“I யோவான் 3: 9. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.“ நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன் ஆகையினால் பாவம் செய்வது இல்லை ஆமென்!
ஒருவேளை மறுபடியும் பிறந்த அனுபவம் இல்லையென்றால் இன்றே ஒப்புகொடுப்போமா? தேவகுமாரனின் ஜீவன்/வெளிச்சம் உங்களில் பிரகாசிக்க இன்றே அவரிடம் வேண்டிக்கொள்வோமா?
மத்தேயு 7: 11 பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு நிச்சயமாகவே அவர் செவிகொடுப்பார் ஆமென்! கிருபையாவரோடும் இருப்பதாக! ஆட்டுகுட்டியானவருக்கே எல்லா துதியும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக ஆமென்!

Disciples of Christ