சனி, 13 ஏப்ரல், 2019

அப்போஸ்தலர்கள்



அழைக்கப்பட்டவர்கள்

அப்போஸ்தலர்கள் என்றால் யார்? முதலாவதாக அவர்கள் அழைக்கப்பட்டவர்களாய் இருந்தார்கள். அழைக்கப்பட்டவர்கள் என்று சொல்லும்போது இயேசு கிறிஸ்து ஒவ்வொருவரையும் தெரிந்துகொண்டு அவர்களைத் தனித்தனியே அழைத்ததை பார்க்க முடியும். அப்படி அவர்கள் அழைக்கப்பட்ட பின்பு அவர்கள் தாங்கள் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்களோ அதை எல்லாம் விட்டு கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்தை நிறைவேற்ற அவரோடு நடக்க வந்தார்கள். இயேசு எந்த ஊழியத்தை செய்தார்?  ஜனங்களை பாவத்திலிருந்து விடுதலை  ஆக்கி சத்திய வார்த்தைகளை போதித்து அவர்களை நல்வழிப்படுத்தும்படி, அது மாத்திரமல்ல அவர்களுடைய வியாதியிலிருந்து சுகம் கொடுத்து பிசாசின் பிடியில் இருந்து அவர்களை விடுதலையாகி அவர்கள் இரட்சித்தார். அப்படியானால் ஒரு  அப்போஸ்தலரின் வேலை இயேசு செய்த படியே ராஜ்யத்தின் சுவிசேஷத்தை அறிவித்து பரலோக ராஜ்ஜியம் சமீபமாய் வந்திருக்கிறது என்று சொல்லி ஜனங்களை பாவத்திலிருந்தும் அக்கிராமத்திலிருந்தும் விடுவித்து பிணியாளிகள் சுகமாக்கி அவர்களை தேவனுக்கு நேரே  நடத்துகிறவர்களாய் இருக்க வேண்டும்.

*மற்றும் ஒரு அழைப்பு*

லூக்கா 10 வது அதிகாரம் 1 வசனம் இப்படியாக சொல்கிறது இவைகளுக்குப்பின்பு கர்த்தர் வேறு 70 பேரை நியமித்து தாம் போகும் பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களை தமக்கு முன்னே இரண்டு இரண்டு பேராக அனுப்பினார்
இந்த இடத்திலே இவர்களைக் குறித்து பார்க்கும்போது இவர்கள் எதையும் விட்டு வந்தவர்கள் என்று சொல்லப்படவில்லை மாறாக இவர்களை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால் இவர்கள் தங்கள் குடும்பத்தாரோடு கூட இணைந்து தேவனுடைய வார்த்தையை சொன்னவர்கள் ஆக எடுத்துக் கொள்ளலாம் முதலிலேயே பார்த்தோம் ஆண்டவர் தெரிந்துகொண்டு அழைக்கிறார் அழைக்கப்பட்டவர்கள் எல்லாவற்றையும் செய்து இருந்த வேலையை முதற்கொண்டு விட்டு வந்தவர்கள். கர்த்தராகிய இயேசுவை பின்பற்றியவர்க்களில் சிலரை அதாவது அவர்களில் 70 பேரை கர்த்தர் தெரிந்து கொள்கிறார். வேதத்தில் அநேக இடங்களில் பார்க்கிறோம் அவரை தொடர்ந்து பின்பற்றி வந்தவர்கள் அநேகம் இருந்தார்கள். அவர்களில் இருக்கிற சிலரை ஆண்டவர் வேறு பிரித்து அவர்களை தெரிந்து  கொள்ளுகிறார். அழைக்கப்பட்டவர்கள் அநேகர் இருந்தார்கள் வேறு சிலர் ஆண்டவரைப் பின்பற்றி வந்தார்கள் ஆனால் தேவன் சிலரை தெரிந்துகொண்டது மாத்திரமல்ல, அவர்களுக்கு தன்னுடைய ஊழியத்தை பற்றி நன்கு கற்று கொடுக்கிறார் *தேவனிடத்தில் கற்றுக்கொள்கிறார்கள் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்* மத்தேயு 11:29. பிரியமானவர்களே! நீங்கள் யாரிடத்தில் கற்றுக் கொள்கிறீர்கள்? மனிதர்களிடத்தில் கற்று கொள்கிறீர்களோ? அல்லது தேவனிடத்திலா? தேவனிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் அது ஒரு நாளும் தோற்றுப் போகிறது இல்லை அவர் நம்மை பெலப்படுத்தி அவருடைய காரியத்தைச் செய்வதற்கு கிருபை அளிக்கிறார் ஆமென்! அல்லேலூயா!
     
தேவனிடத்தில் அதிகாரம் பெற்றவர்கள்

தேவன் அழைக்கிறது மாத்திரமல்ல தெரிந்து கொள்ளுங்கிறது மாத்திரமல்ல தம்முடைய வரங்களினால் அவர்களை நிரப்பவும் செய்கிறார் அதிகாரம் கொடுக்கிறார். பிசாசின் மேல் அதிகாரம் கொடுக்கிறார். பிசாசை துரத்தும் அதிகாரம் கொடுக்கிறார். அது மட்டுமல்ல வியாதியஸ்தர் சுகமாக்குகிற வல்லமை எப்பேர்பட்ட வியாதியஸ்தனாயிருந்தாலும் அவன் சுகம் ஆக்கப்படுகிறான் அது மட்டுமல்ல அற்புதங்களை செய்கிற சக்திகள் உடையவர்களாய் அப்போஸ்தலர்கள் இருக்கிறார்கள்.
நம்முடைய தேசத்திற்கு வந்த அப்போஸ்தலனாகிய தோமா குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொல்லப்பட்ட சில காரியங்களை சொல்லுகிறேன். தோமா அவர்கள் அரபிக் கடலோரம் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தபோது அங்கே சிலர் சூரிய வணக்கத்தைக் செய்கிறதை பார்த்தார். அந்த சூரிய வணக்கம் செய்யும் போது என்ன செய்தார்கள் தண்ணீரை கைகளில் கோரி வானத்துக்கு நேரே விட்டார்கள். மறுபடியும் அந்த தண்ணீர் தன் இடத்திற்கு வந்து சேர்ந்தது தோமா ஒன்று  சொன்னார் நீங்கள் தண்ணீரை யாருக்கு அர்ப்பணிக்கிறார்கள் என்று கேட்டார் அவர்கள் நாங்கள் வணங்கும் இந்த சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று சொன்னார்கள். அதற்கு தோமா கடவுளுக்கு கொடுக்கப்பட்டதானால் ஏன் கடவுள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கேட்டார். அதேபோல் கடவுள் ஏற்றுக் கொண்டால் தண்ணீரில் பள்ளம் உண்டாகும் அல்லவா என்று சொன்னார். அதைக் கேட்ட ஜனங்கள் அது எப்படி சாத்தியம் என்று கேட்டார்கள். அதற்கு தோமா நான் வணங்குகிற உண்மையான கடவுள் அதை செய்ய சாத்தியம் உள்ளவராயிருக்கிறார் என்று சொன்னார் அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டார்கள் எங்கே அதை செய்து காட்டுவோம் என்று சொன்னார்கள் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் உள்ளவராய் விசுவாசத்தில் நிறைந்தவராய் அந்த தண்ணீரைக் கோரி வானத்தில் விட்டார் தண்ணீர் வானத்தில் நின்று விட்டது. தண்ணீர் கோரின இடம் பள்ளம் ஆகிவிட்டது இதைப் பார்த்து அங்கிருந்த அநேகர் இயேசு தான் உண்மையான ஆண்டவர், இயேசு தான் உண்மையான தெய்வம் என்று அவரைச் சேர்ந்து கொண்டார்கள். இப்படி அற்புதங்கள் மூலம் ஜனங்களை தேவனுக்கு நேர திருப்பக்கூடிய வல்லமை படைத்தவர்களாய் இருக்கிறார்கள். அதனாலதான் அப்போஸ்தலர்களுக்கு தேவன் அற்புதங்களைச் செய்யும் கிருபைகளை தருகிறார் ஆமென்!
அப்போஸ்தலன் என்பவன் தேவனை மட்டும்  உயர்த்துகிறவனாய் இழக்கிறான் அவன் தேவனையே காட்டித் தருகிறான் தன்னை எல்லா இடத்திலும் தாழ்த்துகிறான்

இயேசுவை தரிசித்தவர்கள்

அப்போஸ்தலர் இயேசுவை தரித்தவர்களாய் இருக்கிறார்கள் இன்றைக்கும் அநேகருக்கு இயேசு தரிசனம் ஆகியிருக்கிறார் இயேசுவை தரிசித்த பின் ஒரு நாளும் சும்மா இருப்பதில்லை அவர்கள் எழும்பி தேவனை அறிவிக்கிறவர்களாக அவருடைய ராஜ்யத்தை  பறைசாற்றுகின்றவர்களாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சமீபத்திலே நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த சாதுசுந்தர்சிங் ஐயா அவர்கள் அவர்கள் தேவனை தரிசித்த பின்பு அதாவது இயேசுவை தரிசித்த பின்பு உலகமெங்கும் போய் இயேசுவுக்காக சாட்சியாய் வாழ்ந்தது மட்டுமல்ல இந்தியாவின் அப்போஸ்தலன் என்று சொல்லக்கூடிய நிலையிலேயே காரியங்களைச் செய்தார்கள் அதேபோல சகோதரன் அகஸ்டின் ஜெபக்குமார் கர்த்தராகிய இயேசுவை தரிசித்த பின்பு ஆண்டவரின் கண்களை கண்ட பின்பு அந்த கண்களில் கண்ணீரை கண்ட பின்பு பீகாருக்கு சென்று அநேக இடங்களில் தேவனை குறித்து சாட்சி விட்டு இன்றைக்கு அவரிடத்திலே அவரோடு கூட 2800 மிஷனரிகள் பணி செய்யக்கூடிய ஒரு ஊழியத்தை உருவாக்க தேவன் கிருபை தந்தார்  இவரும் கர்த்தருடைய அப்போஸ்தலரே.  சிலர் சொல்வார்கள் பைபிள் காலத்தோட அப்போஸ்தலர்கள் எல்லாம் முடிச்சிட்டாங்க அப்படி அல்ல பிரியமானவர்களே, கிறிஸ்துவின் வருகை பரியந்தம் எபேசியர் புஸ்தகம் தெளிவாக சொல்லுகிறது ஐந்து ஊழியங்கள் சபையில் இருக்கும் ஆமென்! எபேசியர் 4:12,13 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,  அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.
அப்படியானால் கிறிஸ்துவின் வருகை பரியந்தம் இந்த ஐந்து ஊழியங்களும் சபையில் இருந்து தான் ஆக வேண்டும் ஆமென்

சபை ஸ்தாபிப்பு

அப்போஸ்தலர்கள் ஒரு காரியத்தைச் செய்வதை பார்க்க முடியும். அப்போஸ்தலர்கள் தாங்கள் போகிற இடங்களிலெல்லாம் சபையை உருவாக்கினார்கள். உருவாக்கியது மட்டுமல்ல அங்கே தகுதியான மனிதர்களை தெரிந்தெடுத்து அவர்களுக்கு சீஷத்துவ பணியை தந்து அவர்களை சபைக்கு உத்தர வாதிகளாக அதாவது போதகர்களாக அந்த நபருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கிருபையின் அடிப்படையிலே அந்த நபரை தேவன் வைத்திருக்கிற அழைப்பின் அடிப்படையில் அவர்களை சபைக்கு தலையாக நியமித்து வைத்து பின்பு கடந்து போவார்கள் அது மாத்திரமல்ல வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தாங்கள் நிர்வகித்த சபைக்கு வந்து அந்த சபையை பராமரித்து சூழ்நிலைகளை அறிந்து திடப்படுத்துவார்கள்.  அது மட்டுமல்ல சீஷர்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள் உருவாக்கப்பட்ட சீசன் போய் மற்றும் அநேக சீஷர்களை உருவாக்குவான். இப்படிப்பட்ட நோக்கத்தையே அப்போஸ்தலர்கள் கொண்டிருந்தார்கள் அவர்கள் போகிற இடங்களிலெல்லாம் சபை உருவாக்கப்பட்டது சபைக்கு தேவையான காரியங்களையும் அவர்கள் கவனித்தார்கள் சபையிலே வளரும்படிக்கும் உபத்திரவத்தில் பொறுமையாய் இருக்கும்படிக்கும் சபைக்கு கற்றுத் தந்தார்கள் கொடிய தரித்திரத்திலும் கூட உதாரத்துவமான கொடுக்கக் கூடிய நிலையில் இருந்தது சபை, ஏழைகளை விசாரிக்கிற தன்மை சபையில் உண்டாக்கப்பட்டு இருந்தது. விதவைகளை பராமரிக்க கூடிய நிலைகள் இருந்தது. சபை அனுப்பப்பட்டவர்களாகிய சீஷர்களை ஜெபத்தினாலும் பொருளுதவியினாலும் தாங்கியது இப்படிப்பட்ட சபையாய் இருக்க தேவன் உங்களையும்  அழைக்கிறார். ஆமென்!

உபத்திரவத்தில் பொறுமை

அதீதமான தேவனுடைய கிருபைகளை கொண்டிருந்தாலும், தேவனுடைய தன்மைகளை தங்கள் இடத்திலேயே வைத்துக்கொண்டிருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் பொறுமை இழக்காதவர்களாய் தாழ்மையோடு எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துகிறவர்களாய், மரணம் ஏற்படுகிறதாய் இருந்தாலும் அதைக் குறித்து பயப்படாதவர்களாய் ஆண்டவரிடத்தில் போகப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு வாழ்ந்தவர்கள் உபத்திரவத்தை குறித்து பயப்படாமல் இருந்தார்கள் எந்நேரமும் அடிக்கப்படுகிற ஆடுகளைப் போல் இருக்கிறோம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறதை பார்க்க முடியும். மரணம் வரும் என்று  நிச்சயித்து இருந்தார்கள். மரணத்தைக் குறித்து ஒரு நாளும் பயப்பட்டதே இல்லை. தேவனுடைய ராஜ்யத்தை குறித்ததான ஏக்கம் நிறைந்தவர்களாய் மாத்திரம் இருந்தார்கள் கிறிஸ்துவை அறிவிக்கிறதினால் மரித்துப்போவோம் என்று இருந்தாலும் அதைக் குறித்து பயப்படவே இல்லை. அநேக மிஷனரிகளின் சாட்சி இப்படிச் சொல்கிறது நர மாமிசம் சாப்பிடுகிறவர்கள் மத்தியில் போய் அங்கே மரித்தாலும் பரவாயில்லை என்று தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அப்படி அவர்கள் செய்ததினாலே அநேகர் இன்று கர்த்தரை ஆராதிக்கிறார்கள் நம்முடைய தேசம் கர்த்தரை அறியாது இருந்த போதும் அநேக மிஷனரிகள் இங்கே புறப்பட்டு வந்து ஒருமுறை தானும் தன்னுடைய சொந்த தேசத்திற்கு திரும்பிப் போக மனது இல்லாதவர்களாய் நம்முடைய தேசத்திலேயே அவர்களுடைய கல்லறை இன்றும் இருக்கிறது பிரியமானவர்களே! இப்படி தேசம் விட்டு தேசம் வந்து தங்கள் ஜீவனையும் கொடுத்த அப்போஸ்தலர்கள் அநேகர் உண்டு, நம்மிடத்திலிருந்து புறப்பட்டுப்போய் அனேக பகுதிகளிலேயே அப்போஸ்தல ஊழியத்தை செய்கிறவர்கள் உண்டு தேவன் உங்களை அழைப்பார் என்றால் பயப்படாதீர்கள் உங்களை ஒப்புக்கொடுங்கள் கர்த்தருக்கென்று எழும்பி அவருடைய ஊழியத்தை செய்யுங்கள் சபையில் மாத்திரமா ஊழியம்? நல்லதுதான் சபை ஊழியம் நிச்சயம் அவசியம் அது இல்லை என்றால் விசுவாசிகள் சீஷர்களாய் மாறுவது கடினமே சபையும் அவசியம் சபை எழும்பி அநேகரை மிஷனரிகளாக அப்போஸ்தலர்கள் ஆக அனுப்ப வேண்டியதன் அவசியம் உண்டு. அதை மறவாது செயல்படுத்த வேண்டும். கர்த்தருடைய ஊழியக்காரரே இன்றைக்கு ஒரு உத்திரவாதம் செய்வோமா தேவ ஜனங்களே இன்றைக்கு ஒரு உத்தரவாதம் செய்வோமா ஆதிசபை செய்ததுபோல் மரணம் நேரிடுகிறதாய் இருந்தாலும் அதை குறித்து பயப்படாமல் தேதியை அறிவிக்க  எலும்புவாயா? தேவ சத்தம் கேட்டும் இன்னும் காலம் போகட்டும் என்று சொல்வாயோ தேவனுடைய இருதயத்தை தன் வேதனையை அறியமாட்டாயோ? எழும்பு! எழும்பு! சபையே தேவனுடைய ராஜ்யத்தை கட்டுகிறவர்கள் எலும்பு  ஆண்டவரை அறியாதவர்கள் அநேகர் உண்டு, அறிந்திருக்கிறேன் என்று சொல்லுகிறவர்கள் உண்மையாய் இல்லாததனால் அல்லவா இன்றும் நம் தேசம் கர்த்தரை அறியவில்லை இன்றைக்கு ஒரு தீர்மானத்தோடு நான் எழும்பி தேவனுடைய ராஜ்யத்தை கட்டப்படும் என்று சொல்வாயோ? உன்னை தான் தேவன் தேடுகிறார் உன்னை ஒப்புக் கொள்கிறாயா? உன்னோடு பேசவும் உன்னை எழுப்பவும் தேவன் விரும்புகிறார் உன்னை அர்ப்பணிக்கிறாயா? இன்றே அர்ப்பணிப்போம் தேவனுடைய பாரத்தை பெற்றுக்கொள்வோம் தேவ சித்தம் நிறைவேற்றுவோம்.

கிருபை யாவரிலும் பெருகுவதாக!
தேவ சமாதானம் உங்களை ஆளுகை செய்வதாக! தேவன், நீங்கள் தன்னை அறியும் அறிவை உங்களுக்கு அதிகமாய் தந்தருள்வாராக!
அல்லேலுயா! ஆமென்! ஆமென்! ஆமென்!

கிறிஸ்துவின் சீஷர்கள் ஊழியங்கள்
உங்கள் சகோதரன் புரூஸ்

கருத்துகள் இல்லை: