புதன், 27 ஜூலை, 2016

சத்துருக்களைச் சிநேகியுங்கள்

சத்துருக்களைச் சிநேகியுங்கள்

அன்பு சகோதர சகோதரிகளுக்கு, நாம் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின் படியே செய்திட கடனாளிகளாய் இருக்கிறோம். 
மத்தேயு 5 : 44 & 45. “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” – இந்த வசனத்தின்படி நாம் நம்மை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிப்போம், கர்த்தர் யாவையும் நன்மையாகவே செய்து முடிப்பார். உலகத்தவர்களுடைய காரியங்களையும் நம்முடையவைகளையும் ஓப்பிடுவது வேத வசனத்தின் படி சரியானது அல்ல.
யோவான் 15:17- 21 “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.” – இவ்வசனத்தின்படி நாம் கேள்விபடுகிற அல்லது நமக்கு சம்பவிக்கிற காரியங்களுக்காய் கர்த்தர் இவைகளை குறித்து முன்னறிவித்தபடியே நடக்கிறபடியால் கர்த்தரை ஸ்தோத்திரம் பண்ணுவோம். எழுப்புதலின் அக்கினி நம் தேசத்தில் பரவுகிறதற்காய் தேவன் சபையின் துன்பத்தை அனுமதிகிறதற்காய் ஸ்தோத்திரம் பண்ணுவோம்! 
கிருபையாவரோடும் இருப்பதாக!ஆட்டுகுட்டியானவருக்கே எல்லா துதியும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக ஆமென்!

Disciples of Christ

பாவத்தின் இருள் பற்றிக்கொள்வதில்லை

பாவத்தின் இருள் பற்றிக்கொள்வதில்லை

யோவான் 1:4. அவருக்குள் (கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்) ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. 5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. பிரியமானவர்களே! இந்த தேவ வார்த்தையின் மூலம் (“Disciples of Christ” “கிறிஸ்துவின் சீசர்கள்”) உங்களை சந்திப்பதில் பெருமகழ்ச்சி அடைகிறேன்! 

கர்த்தரின் கிருபை உங்களோடிருப்பதாக! நம் கிறிஸ்தவ வாழ்வின் அச்சாரமான கர்த்தரின் ஒளியையை அல்லது அந்த ஒளி நம் வாழ்வில் என்ன செய்யும் என்பதை நாம் சரியாய் அறிந்துகொள்ள தேவன் நமக்கு உதவி செய்வாராக. யோவான் 1:4 இன்படி அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் தான் மனுஷருக்கு ஒளியாய் இருந்தது என்று பார்க்கிறோம். கிறிஸ்துவை தன் வாழ்வில் சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டவர்களுக்கு அவரே/அவருடைய ஜீவனே ஒளியாயிருகிறது. 

அது மட்டுமல்ல “எபேசியர் 5:8. முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்;” இந்த வேத வார்த்தையின்படி கிறிஸ்து நமக்குள்ளே வெளிச்சமாய் மாறுகிறதற்கு முன்னே நாம் இருளில் அல்லது அந்தகாரத்தில் இருந்தோம் அல்லவா! யோவான் 1:5 இன்படி அந்த ஒளி இருளிலே அதாவது இருளாய் இருந்த நம்மிடத்திலே பிரகாசிக்கிறது! ஆமென்! என்னில்/நம்மில் இருந்த இருள் அந்த ஜீவ ஒளியை பற்றிக்கொள்ளவில்லை. மாறாக அந்த ஒளியானது என்னில்/நம்மில் பிரகாசிக்கிறதாயிருகிறது கர்த்தருக்கே மகிமையுடாவதாக ஆமென்! இப்படியிருக்க பிரியமானவர்களே! என்னில் உள்ள இருளாயிருக்கிற பாவம் என்னை மேற்கொள்ள மாட்டது ஏனென்றால் “ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.” ஆமென்! ஒரு காரியத்தை சற்று நிதானித்து அறியும்படி வேண்டிக்கொள்கிறேன், கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்திலே வாழ்ந்தபோது அவர் பாவிகளோடு சஞ்சரித்தார் ஆனாலும் அவரை பாவம் ஆண்டுகொள்ளவில்லை மாறாக பாவத்திலிருந்தவர்களுடைய வாழ்கை மாறியதே! இன்று பொதுவான ஒரு கருத்து தேவஜனங்களிடம் இருக்கிறது, அது என்னவேன்றால், பாவத்தில் இருக்கிற மனிதர்களிடம் நாம் பேசினாலோ அல்லது பழகினாலோ நாமும் பாவத்தில் சிக்கிக்கொள்வோம் என்று அஞ்சுகிறோம், இந்த அச்சம் அப்படியே சம்பவிக்கவும் செய்கிறது ஏனென்றால் தேவனுடைய வார்த்தையின் வல்லமை அல்லவோ “மத்தேயு 9:29 உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். மத்தேயு 8:13” தேவபிள்ளைகளாகிய நாம் எதை விசுவாகிறோமோ அப்படியே சம்பவிக்குமே! பாவத்தில் இருப்பவர்களோடு நாம் பழகினால் அந்த பாவம் நம்மையும் பிடிக்குமே என்று அபோஸ்தலர்களோ அல்லது மிஷ்னரிகளோ எண்ணியிருப்பார்களானால் அவர்கள் எல்லாதேசங்களுக்கும் போய் கிறிஸ்துவை பிரசங்கித்ருக்கமாட்டார்களே, ஆகமொத்தத்தில் உலகத்தார்கள் பேசுகிறபடி நாமும் சாய்ந்து போனதினால் அல்லவோ ஆதிவிசுவாசம் மறக்கடிக்கபட்டு போயிற்று, அதனால் அல்லவோ கிறிஸ்துவை நம் வாழ்வில் காண்பிக்கவும் அறிவிக்கவும் தவறிவிட்டோம்! சத்துருவின் இந்த கொடிய தந்திரத்தில் அமிழ்ந்து போன நிலைகளை அறிந்து இப்பொழுதே எழுந்திருப்போம்! தேவகிருபை நம்மை தாங்கி நடத்துவதாக ஆமென்!
ஒருவேளை இந்த நாளிலே என்னால் குறிப்பிட்ட இந்த பாவத்தை விடமுடியவில்லையே என்று ஏங்கிகொண்டிருகிறீர்களோ பிரியமானவர்களே, இன்றே தேவனுடைய வார்த்தையை விசுவாசத்தோடு பின்வரும் படியாக அறிக்கை பண்ணுவோமா “கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னில் இருக்கிறபடியால் என்னை பாவம் மேற்கொள்ளுவதில்லை” “நீதிமொழிகள் 18: 21. மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.” யின்படி விசுவாச வார்த்தைகளையே சொல்லுவோம் அவிசுவாசமான அல்லது என் விசுவாசவாழ்கையை பதிக்கிற எந்த வார்த்தையையும் நம் வாயினாலே சொல்லாமல் இருப்போம். எனவே கர்த்தாகியே இயேசுகிறிஸ்து என்னில்/நம்மில் இருக்கிற படியால் நான் பாவத்தில் விழுவதில்லை மாறாக பாவத்தில் இருப்பவர்களை அவருடைய நாமத்தினால் விடுவிப்பேன் ஆமென்!
I யோவான் 3:8. பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
பிசாசின் கிரியைகளை என்னிலிருந்தும் உலகத்திருந்து அழிக்கும்படிக்கே தேவகுமாரன் வெளிப்பட்டார் என்று பூரணமாய் விசுவாசிக்கிறேன் ஆமென்!
“I யோவான் 3: 9. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.“ நான் மறுபடியும் பிறந்திருக்கிறேன் ஆகையினால் பாவம் செய்வது இல்லை ஆமென்!
ஒருவேளை மறுபடியும் பிறந்த அனுபவம் இல்லையென்றால் இன்றே ஒப்புகொடுப்போமா? தேவகுமாரனின் ஜீவன்/வெளிச்சம் உங்களில் பிரகாசிக்க இன்றே அவரிடம் வேண்டிக்கொள்வோமா?
மத்தேயு 7: 11 பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு நிச்சயமாகவே அவர் செவிகொடுப்பார் ஆமென்! கிருபையாவரோடும் இருப்பதாக! ஆட்டுகுட்டியானவருக்கே எல்லா துதியும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக ஆமென்!

Disciples of Christ