கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தருடைய சீஷனாய் ஜெபிக்க ஆயத்தமா? இந்த கடைசி காலத்தில் கர்த்தருக்காய் வாழ்ந்து கர்த்தருக்காய் மரித்திட ஆயத்தமா? அப்படியென்றால் தேவன் தேடும் நபர் நீதான் சகோதரா சகோதரி. தினமும் அவர் சமூகத்தில் தனித்திருந்து ஜெபிப்பாயா? உனக்காய் அல்ல உன் தேவைகளுக்காய் அல்ல ஆத்தும பாரத்தோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இனைந்து ஜெபிக்க ஆயத்தமா? அழிந்து போகிற ஜனங்களுக்காய் ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது கதறி அழுவாயா? மனுஷர் பார்க்கும்படி வீதிகளில் அல்ல உன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து தனிமையில் கர்த்தரை நோக்கி கதறி அழுவாயா? அப்படியென்றால் இதோ வேதம் சொல்லுகிற சீஷர்களின் வாழ்வை போல் உன்னை மாற்றிக்கொள்ள ஆசைப்படு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக