வியாழன், 9 மார்ச், 2017

ரேணியஸ் ஐயர்

ரேணியஸ் ஐயர் 5 நவம்பர் 1790 – 5 ஜூன் 1838.



இளமைப்பருவம்  

திருநெல்வேலியின் அப்போஸ்தலன் சார்லஸ் தியோபிளஸ் எவால்டு ரேணியஸ் 5 நவம்பர் 1790 மேற்கு ரஷ்யாவில் உள்ள மேரியன்பெர்டேர் என்கிற ஊரில் பிறந்தார். தனது 6வது வயதில் தந்தையை இழந்தார். 14ம் வயதில் தன் தாய்க்கு உதவ வேலை தேடி எழுத்தர் வேலையில் சேர்ந்தார். ஊதியம் போதவில்லை. இதை அறிந்த இவரின் பெரியப்பா தன் பண்ணையில் ஈடுபடுத்தி தன்னோடு வைத்துக்கொண்டார். ரேனியசோ ஆத்மீக விஷயத்தில் அக்கறையில்லாதவராக இருந்தார்.

இரட்சிப்பின் அனுபவம்

தனது பெரியப்பா வீட்டில் காணப்பட்ட பக்தி வாழ்க்கை அவரை சிந்திக்க வைத்தது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு தன்னை ஒப்புகொடுத்தார்.

ஊழிய அழைப்பும் அர்ப்பணிப்பும்

தேவனால் ஊழியத்திற்கு அழைக்கப்பட்டார். மிகுந்த போராட்டத்தின் மத்தியில் கர்த்தருடைய பரம தரிசனத்திற்கு கீழ்ப்படிந்து கர்த்தருக்காக எதாகிலும் செய்ய வேண்டுமே என்கிற ஆவல் கொண்டார் அர்ப்பணித்தார். அந்நாட்காளில் அவர் அதிகமாய் விரும்பி வாசித்தது இந்தியாவில் தரங்கம்பாடியிலுள்ள மிஷனரிகளின் அறிக்கைகளாகும். அதை வாசிக்க வாசிக்க அவருக்குள்ளும் மிஷனெரி தாகம் பற்றிக்கொண்டது, அதனால் கிறிஸ்துவை அறியாத மற்ற தேசங்களுக்கு அவரை அறிவிக்க வேண்டும் என்கிற தாகம் உண்டாயிற்று. இதை குறித்து தன் பெரியப்பாவிடம் தெரிவித்தார். அப்பணிக்கு இறைக்கல்வி முக்கியம் என்று அறிந்து அதற்குரிய ஆயத்தத்தை செய்தார். இதை அறிந்த பெரியம்மா இவரின் இருதயத்தை மாற்ற முயன்று தோற்றுப்போனார். குடும்பப்பணிகளை விட மிஷனெரி பணி முக்கியமா என்று கேட்டார். ரேணியஸ் உடைந்து போனார். அம்மாவும் கடல் கடந்து என்னை விட்டு போய்விடாதே என்று கெஞ்சினார். கர்த்தர் போக சொன்னால் நான் என்ன செய்யக்கூடும் என்றார். அன்று முதல் அவரின் தாயார் அவரை மிஷனெரி ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தார். ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் 1812 ரஷ்யாவில் உள்ள லுத்தரன் சபையில் குருப்பட்டம் கொடுக்கப்பட்டது.

மிஷனெரி பயணம்

14/02/1814 ரேணியஸ்ம் செனார் என்பவரும் சென்னைக்கு கப்பல் ஏறினர். 4/07/1814 சென்னை வந்தார் ரேணியஸ். தரங்கம்பாடி சென்று தமிழை கற்கத்தொடங்கினார். ஐந்தே மாதங்களுக்குள் தமிழை வாசிக்கவும் எழுதவும் தெருப்பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார். பின்பு சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன்னில் குடியேறினார். தன் வீட்டின் பின்னே உள்ள விக்கிரகங்களை வணங்கும் மக்களுக்கு சுவீஷேச பணியை ஆரம்பித்தார். சிறுபிள்ளைகளுக்கென்று நற்செய்தி பணியை ஆரம்பிக்க ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார். ஞாயிற்றுக்கிழமைகளில் அதில் ஆராதனை நடத்தினார்.


மணவாழ்வு  

ரேணியஸ் ஊழியத்தில் தனக்கு உதவியாய் இருக்க வான் சொமுரன் என்ற   பக்தியுள்ள டச்சு குடும்பத்தை சார்ந்த ஆணி என்கிற பெண்ணை மார்ச் மாதம் 7ம் நாள் மணந்தார். ஆணி அம்மாள் ரேணியஸ்ன் திருப்பணியில் பங்கெடுத்து அவருக்கு உத்தம துணைவியாக விளங்கினார்.

ஊழியத்தின் பாதை

ரேணியஸ் மூன்று பள்ளிகளை ஆரம்பித்தார், அதில் இரண்டு பள்ளிகளில் தமிழிலே பாடங்கள் கற்ப்பிக்கப்பட்டன ஒருபள்ளியில் ஆங்கில மொழியில் கற்ப்பிக்கப்பட வழி செய்தார். தொடர்ந்து சென்ற இடங்களில் எல்லாம் பள்ளிகூடங்கள் நிறுவப்பட்டன. கிறுஸ்தவ ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக ஒரு போதனா முறை காலசாலையை அதாவது செமினேறி ஒன்றை துவக்கினார்.