கிருஸ்தவர்கள் தீபாவளி கொண்டாடலாமா
தீபாவளி என்பது கடவுள்
அவதாரமெடுத்து தீமையை அழித்து அல்லது துன்மார்க்கனை அழித்து ஜனங்களை விடுதலை அல்லது
காப்பற்றியதாக சொல்லுகிறார்கள்! இப்படியிருக்க கிருஸ்தவர்காளாகிய நாம் இப்படிப்பட்ட
கொண்டாட்டங்களில் பங்குகொள்ளலாமா? அல்லது வாழ்த்துதல் சொல்லலாமா? அன்பான
கர்த்தருடைய பிள்ளைகளே இதை சற்று சிந்தித்து பார்க்கும்படி வேண்டுகிறேன்!
கிறிஸ்தவம் என்பது சத்துருக்களையும் சிநேகிக்க சொல்லுகிற அன்பின் மார்க்கம்!
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கும்போதும்கூட தன்னை
சிலுவைவில் அறைந்தவர்களை மன்னிதாரே! அதுமட்டுமல்ல தன்னை மறுதலித்தவனை தேடிப்போய் அவனில் அன்புகூர்ந்தாரே! பாவி அல்லது
துன்மார்க்கன் மனம் திரும்புவதையே எதிர்பார்க்கிறேன் என்று பாவிகளை நேசிக்கும்
அன்பு வேறே எந்த தெய்வத்திடத்தில் உண்டு, நம் கர்த்தராகிய இயேசுவை தவிர! இதுவல்லவோ கிறிஸ்துவை பின்பற்றுகிறேன் என்று
சொல்லுகிறவர்கள் செய்யவேண்டிய காரியம்! அப்படியிருக்க பிரியமானவர்களை ஒரு துன்மார்கனின்
மரணத்தை கொண்டாடுகிறவர்களுக்கு வாழ்த்து சொல்லுவோமானால் நம்மிடத்தில் தேவ அன்பு
இல்லையே! ஏனென்றால் நீதிமான்கள் ஒருவனாகிலும் இல்லையே! எல்லாரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானோம்
(ரோமர் 3: 23) என்று வேதம் சொல்லியிருக்க அவருடைய வார்த்தையின்படி நானும் நீங்களும் பிரதான
பாவியாய் இருந்தபோதல்லவா என்னை/நம்மை தேடி வந்து அவருடைய அன்பை எனக்கு/நமக்கு காண்பித்தார்.
நான் பெற்றுக்கொண்ட இத்தனை பேரிதான இரட்சிப்பை, பாவத்தில் துன்மார்க்கத்தில்
இருப்பவர்களும் பெற்றுக்கொள்ள வேண்டுமே என்கிற தாகம் உண்டோ? இல்லை நான்
இரட்சிக்கப்பட்டேன்! தேவன் என்னை நேசித்தார் என் மீது கிருபை வைத்தார் ஆகையினால் நான்
பரலோகம் போவேன் என்று சொல்வது மாத்திரம் அல்ல பாவத்தில் இருப்பவர்கள் மனம் திரும்பவில்லை
என்றால் நரகம் போவார்கள் என்று சொல்லி நாம் அவர்களை தப்புவிக்கவேண்டுமே என்கிற
எண்ணம் இல்லதவர்களாய் இருக்கிறோமா? எப்படி இருக்கிறோம்! அவர் (கர்த்தராகிய இயேசு கிறிஸ்து)
நான் பாவத்தில் இருக்கும்போது என்னை தேடி வந்தாரே! அப்படிப்போல தேவ அன்பு இன்னும்
பாவத்தில் இருப்பவர்களை தப்புவிபதற்க்கு கிருபை இன்னும் இருக்கிறதே! ஆகவே காரியம்
என்னவென்றால் பாவத்தில் இருப்பவர்களை மான்னிப்போம் கிறிஸ்து உங்களை ஏற்றுக்கொண்டதுபோல
நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொளுங்கள் (ரோமர் 15:7) ஆனாலும் அவர்களின் தாறுமாறான வழிகளை அல்ல! கிறிஸ்து நமக்குள்ளே
இருக்கிறார் என்கிற விசுவாசம் நம்மிடத்தில் பூரணப்படுமானால் (ரோமர் 6:14) ....கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது
துன்மார்க்க ஜீவியத்தை தேவன் வெறுக்கிறார் ஆனால்
துன்மார்க்கனை அல்ல! பாவியை/துன்மார்க்கனை மனம் திரும்ப அழைக்கவந்தார் ஆமென்!
அவருடைய வருகைவரையிலும் இந்த கிருபை உண்டல்லவோ! இதனை நாம் கருத்தில்கொண்டு
ஒருவரிலொருவர் அன்பு கூறுவோமாக! ஆமென்!
புரஜாதிகளின் மார்க்கத்தை கற்றுக்கொள்ளதிருங்கள்!
தேவக்கிருபை நம்
யாவரோடும் இருப்பதாக ஆமென்! ஆட்டுகுட்டியானவருக்கே எல்லா துதியும் மகிமையும்
சதாகாலங்களிலும் உண்டாவதாக! ஆமென்!
Disciples of Christ Ministries - DCM
Disciples of Christ Ministries - DCM